வெற்றி

“உங்களுக்கு வெற்றி வேண்டும் என்றால், அதைத் தேடிச் செல்லாதீர்கள். உங்கள் தகுதியை, திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களால் செய்யமுடிந்ததில் ஒரு துளி கூட மிச்சம் வைக்காதீர்கள்.”
– சத்குரு
ஆயிரம் சொன்னாலும், கடைசியில் உங்கள் வாழ்வில் வெற்றி என்பது, உங்கள் உடலையும், மனதையும் நீங்கள் எந்த அளவிற்குத் திறம்பட உபயோகிக்கிறீர்கள் என்பதைப் பொருத்து தான் இருக்கிறது. இந்த இரண்டு பரிமாணத்திலும் நீங்கள் வளர்த்துக் கொள்ளவேண்டிய சில முக்கியமான அம்சங்களை இங்கே சத்குரு விவரிக்கிறார். தெளிவான சிந்தனைத் திறனைப் பெறுவதற்கு, தினமும் நீங்கள் செய்யவேண்டிய 5-நிமிட செயல்முறை இங்கே உங்களுக்காக வழங்கப் பட்டிருக்கிறது... பரிசோதித்துப் பாருங்களேன்!