அன்பு

“நாம் மனிதர்களை பயன்படுத்திக் கொண்டு, பொருட்களின் மீது அன்பு செலுத்திக் கொண்டிருக்கிறோம். இது வாழ்வை அணுகுவதற்கு முற்றிலும் தவறான வழி. பொருட்கள் நம் பயன்பாட்டிற்கும், மனிதர்கள் நம் அன்பிற்கும் உரியவர்கள்...”
– சத்குரு
ஒவ்வொரு உறவிலும் உண்மையான அன்பை ஒரு சில நொடிகள் உணர்ந்திருப்பீர்கள், ஆனால் அது அவ்வப்போது வந்துபோவதாகவே இருக்கிறது. எப்போதும் அன்புடன் இருக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா? அன்பின் இயல்பென்ன, அதை எப்போதும் வாழ்வில் தக்கவைத்துக் கொள்ளும் வழி தான் என்ன? இதோ... தினமும் ஐந்தே நிமிடங்கள் செலவு செய்து, எப்போதும் அன்புடன் வாழ்ந்திருக்க சத்குரு வழங்கும் ஒரு எளிய முறை...