உள்நிலை அறிதல்

“மறைஞானம் என்பது ஞானமடைவதற்கான தொழில்நுட்பம் அல்ல. இப்படைப்பை முழுமையாய் ஆராய்ந்து அறிவதற்கான விஞ்ஞானம்”
– சத்குரு
உங்கள் உடல் மற்றும் மனம் தாண்டி வாழ்க்கைக்கு வேறு பரிமாணம் உள்ளதா என்று என்றேனும் நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? இந்தப் பரிமாணங்களை அடைய வேண்டுமெனில், நம் அடிப்படைக் கூறுகளான - நிலம், நீர், நெருப்பு, காற்று, மற்றும் ஆகாயத்தை நாம் சுத்திகரிக்க வேண்டும். இதற்கான தொழில்நுட்பம் தான் யோகா.