சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா (ஈஷாவின் இசை முழக்கம்)
ஞானிகள் எப்பொழுதுமே ஒலியை வெறும் பொழுது போக்குக்காக மட்டும் பயன்படுத்தாமல், அதற்கும் அப்பால் சாதாரண ஒலிக்கலவைகளில் ஒரு தெய்வீக பரிமாணத்தைக் கொண்டு வரச் செய்து நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். பல்லாயிரம் வார்த்தைகள் உபயோகித்தும் தொடப்பட முடியாத மனிதர்களையும் ஏக்தாராவின்(புராதன இந்திய இசைக்கருவி) ஒரு சிறு மீட்டல் நெகிழ்ச்சியடையச் செய்துவிடும்.
'சவுண்ட்ஸ் ஆப் ஈஷா' என்பது சத்குருவின் உருவாக்கத்தில் நிகழ்ந்த ஈஷாவின் இசைக்குழு. இந்த இசைக்குழுவில் இருப்பவர்கள் அனைவரும் ஈஷாவின் தன்னார்வத் தொண்டர்கள். வெவ்வேறு திறமைகள் கொண்ட, இசைக்குப் புதியவர்களான இவர்கள் ஆழமான தேடுதல் மற்றும் நன்றியுணர்வால் இந்த இசைக்குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் பல்வேறு குணங்கள் கொண்டவர்கள். பல நாடுகளிலிருந்தும் வந்தவர்கள். இவர்கள் தங்கள் இசைக் கருவிகளை ஒன்றிணைத்து பல சூட்சமமான இசை நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார்கள். நான்கு வருடங்களுக்கு முன்னர் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த இசைக்குழு இதுவரை இரண்டு இசை ஆல்பங்களை வழங்கியிருக்கிறது. ஏராளமான ரசிகர்களும் இவர்களுக்கு உள்ளனர். தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பு உணர்வுடனும், கடுமையான ஒழுக்க நெறியுடனும் வாழ்கிறார்கள். ஒவ்வொருவரும் விதவிதமான பணிகளில் ஈடுபடுபவர்கள். ஈஷா அறக்கட்டளையின் பணிகளை புதிய பரிமாணத்தில் வழங்கும் ஆர்வத்தில், அனைவரும் அவரவர் வேலைகளை முடித்தபிறகு, இரவில் ஒன்றுகூடி, இந்த உணர்ச்சிமிக்க ராகங்களையும் பாடல்களையும் உருவாக்கியிருக்கிறார்கள்.
இவர்களது பாடல்கள் எல்லாம் பல்வேறு நாடுகள் மற்றும் கலாச்சாரங்களின் இனிமையான கலவை. எல்லைகள் மற்றும் கலாச்சாரங்களைத் தாண்டி இவை இனிமையாக ஒலிக்கின்றன. இப்பாடல்கள் நமது மனதிற்கு இதமாகவும் நம்மை குதூகலத்தில் ஆழ்த்துவதாக இருந்தாலும், உண்மையில், இப்பாடல்கள் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆழ்ந்த நிசப்தத்தை உருவாக்கி அவர்களது உள்ளத்தைத் தொடுகிறது.
சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா' ஒவ்வொருவரையும் சூட்சமமான நிலைகளுக்குக் கொண்டு சென்று தங்களையே கண்டறிதலுக்கு உதவுகின்றன.
இக்குழு ஜஹானே குஸ்ரவ் (2006)திருவிழாவிலும் உலகத் தலைவர்கள் மாநாடு, இளம் தலைவர்கள் மாநாடு, பெருமை மிக்க ஐ.நா.மாநாடுகள் போன்றவற்றிலும் வாசித்திருக்கிறது. மேலும், பிரபல தாள இசைக் கலைஞர் சிவமணி, சுஃபி பாடகரான ஜீலா கான், பிரபல பாடகரான ரெமோ ஃபெர்னான்டஸ் போன்ற கலைஞர்களுடனும், மஹாசிவராத்திரி விழாக்களில், (2007, 2008, 2009, 2010) இணைந்து இசை வழங்கியிருக்கிறது.