யோகியும் நம் காலத்தின் ஆழ்ந்த மெய்யறிவாளருமான சத்குரு அவர்கள் தொலைநோக்குடைய மனிதநேயரும் முதன்மையான ஆன்மீகத் தலைவரும் ஆவார். உள்ளார்ந்த அனுபவம் மற்றும் ஞானம் இவற்றில் ஊன்றி நிற்பது போல சாதாரண அன்றாட வாழ்வுசார் விஷயங்களிலும் ஈடுபாடு உடையவரான சத்குரு, அனைத்து மக்களதுமான உடல் மன ஆன்மீக நலத்துக்காக இடையறாது உழைப்பவர். சுயம் பற்றியதான ஆழ்ந்த ஞானத்திலிருந்து அவர் அடைந்த வாழ்வியல் இயங்கு முறைகள் குறித்த அறிவு, வாழ்வின் நுட்பமான பரிமாணங்களை ஆய்வதில் அவருக்கு வழிகாட்டுவதாயுள்ளது.
நீலநிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருக்கையில் எப்படி வசதியாக உணர்வாரோ அப்படியே இடுப்பில் வெறும் துணியைக் கட்டியிருப்பினும் உணரக் கூடியவர். பிரம்மாண்ட இமயமலையில் வெறுங்காலில் நடப்பது, நெடுஞ்சாலையில் பி.எம்.டபிள்யூ மோட்டார் சைக்கிளில் விரைவது என ஒருவர் சந்திக்கக்கூடிய மிக வித்தியாசமான மெய்யறிவாளர் சத்குரு அவர்கள். வெற்று வழக்கங்கள் சடங்குகள் இவற்றிலிருந்து பெரிதும் விலகி நிற்கும் சுய மாற்றத்துக்கான சத்குரு அவர்களின் அறிவியல் செயல் முறைகள் நேரடியானவை, சக்தி மிக்கவை. எந்தக் குறிப்பிட்ட பாரம்பரியத்தையும் சார்ந்திராமல் சமகால வாழ்வுக்கு உகந்தவற்றை யோக முறைகளிலிருந்து பெற்று ஒருங்கிணைத்து வழங்குகிறார் சத்குரு அவர்கள்.
உலகின் முக்கியமானவையாக விளங்கும் சர்வதேச மன்றங்கள் சிலவற்றில் உரையாற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் சத்குரு. 2007ம் ஆண்டு உலகப் பொருளாதார மன்றத்தின் நான்கு குழுக்களில் பங்குபெற்று அரசியல் விஷயங்கள், பொருளாதார முன்னேற்றம் முதல் கல்வி, சுற்றுச்சூழல் வரை பல பிரச்சினைகள் குறித்துப் பேசினார். 2006ல் உலகப் பொருளாதார மாநாடு, ஸ்வீடனில் நடந்த தால்பெர்க் மாநாடு, ஆஸ்திரேலியாவில் நடந்த தலைவர்களுக்கான மாநாடு ஆகியவற்றில் உரையாற்றினார். ஐக்கிய நாடுகள் சபையின் புத்தாயிரத்தாண்டு அமைதிக்குழு மற்றும் உலக சமாதான அமைப்பு இவற்றிலும் பிரதிநிதியாக இருந்து செயல்பட்டிருக்கிறார்.
சத்குரு அவர்களின் தொலைநோக்கும் நவீன சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள் மீதான புரிதலும் பிபிசி, ப்ளூம்பெர்க், சிஎன்பிசி, சிஎன்என் மற்றும் நியூஸ்வீக் இன்டர்நேஷனல் ஆகிய தொலைக்காட்சிகளில் அவரது நேர்காணல்கள் வெளியாகக் காரணமாக அமைந்திருக்கின்றன. அவரது சிந்தனைகள் இந்தியாவின் முன்னணி தேசிய நாளேடுகளில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. 'சத்சங்கங்கள்' எனப்படும் அவரது கூட்டு தியானங்களுக்கு 3,00,000க்கும் குறையாமல் மக்கள் பங்கேற்கும் அளவுக்கு பிரபலமானவராக சத்குரு விளங்குகிறார். பழமையிலிருந்து மிகப் புதுமை வரையிலான விஷயங்களின் ஊடே தடையற்றுப் பயணிக்கும் சத்குரு அவர்கள் அறிந்தவற்றுக்கும் அறியாதவற்றுக்குமிடையே பாலமாக நின்று, தம்மைச் சந்திப்பவர்கள் வாழ்வின் ஆழ்ந்த பரிமாணங்களை ஆய்ந்தறியவும் அனுபவிக்கவும் உதவுகிறார்.
சத்குரு இந்தியாவில் நிகழ்த்திய ஒரு பொது சத்சங்கம்