கிராமப் புத்துணர்வு இயக்கம்
கிராமப் புத்துணர்வு இயக்கம் ஒரு பன்முனையுள்ள, பல கட்டங்களையுடைய, முழுமையான, இந்தியாவின் கிராமங்களில் புத்துணர்வை ஏற்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் திட்டமாகும். கிராமப்புற மக்களின் ஆரோக்கியத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இது ஒரு தனித்துவம் வாய்ந்த சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மனிதாபிமான முயற்சி. ஏனென்றால் தங்களுடைய அர்பணிப்பு உணர்வுடன் கூடிய தேர்ச்சிப் பெற்ற திறன் வாய்ந்த தொண்டர்கள் மற்றும் மருத்துவர்கள் மூலம் கிராமப்புற மக்களின் அடிப்படையான ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கும் சேவையையும், அலோபதி மருத்துவ சேவையையும் அளிக்கும் அதே சமயம் ஏற்கனவே இருக்கும் வளர்ச்சித் திட்டங்களையும் மேம்படுத்துகிறது. நம் நாட்டில் உள்ள ஆரோக்கியத்தின் மாதிரிப் படிவங்களையும், நோய் தடுப்பையும் சமூக பங்கேற்பிற்கும் தோள் கொடுக்கின்றது.
இத்திட்டம் முழுவதிலும், ஆரோக்கியம், முழுமையான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றது. இதில் கணக்கிலடங்காத, ஈடு இணையற்ற பாகங்கள் உண்டு. இவை எல்லாமே ஆரோக்கியமான சூழலை உருவாக்கவும், முழுமையான வாழ்க்கை முறை அமைக்கவுமே குறிக்கோளாக செயல்படுகிறது. இதில் மனம், உடல், உயிர், சக்தி ஆகிய எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக செயல்படுகிறது.
இத்திட்டம் ஈஷா யோக மையத்தால் ஆகஸ்டு 2003 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது தென் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள 54,000 கிராமங்களில் உள்ள 70 கோடி கிராமப்புற மக்களின் நலனுக்காக துவங்கப்பட்டது. இது 15 வருடங்களில் 2 கட்டங்களாக செயல்படுத்தப்படும். அதற்குப் பிறகு இதை அந்தந்த சமூகங்களே ஏற்று நடத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.