ஈஷா வித்யா
ஈஷாவின் கல்வித்திட்டமான ஈஷா வித்யா, கிராமப்புறங்களில் கல்வியின் தரத்தை உயர்த்தி, பின்தங்கிய நிலையில் உள்ள கிராமக் குழந்தைகளும் தங்கள் முழுமையான திறனை உணர்வதை உறுதி செய்கிறது. தரம் வாய்ந்த கல்வியை பெறுவதன் மூலம் கிராமப்புறக் குழந்தைகளும் சமமான வாய்ப்புகள் பெற்று இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.
ஆங்கில வழியிலான, கணிப்பொறியை அடிப்படையாகக் கொண்ட, ஒவ்வொருவரின் திறமையையும் வெளிக்கொணரும் வகையில் நவீன உத்திகளையும் கொண்ட ஈஷா வித்யாவின் பாடத்திட்டங்கள், எதிர்கால சவால்களையும் சமாளிக்கக்கூடிய திறனை, கிராமப்புறக் குழந்தைகளுக்கு அளிக்கிறது. தமிழ்நாட்டில் வட்டத்திற்கு ஒன்றாக மொத்தம் 206 பள்ளிகளை தொடங்குவது இத்திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது. எதிர்ப்பார்ப்பின்படி, அனைத்து பள்ளிகளும் இயங்கத் துவங்கும்போது, 5,00,000 மாணவர்களுக்கும் மேல் பயனடைவதாக இருக்கும்.
தனிப்பட்ட மனிதர்களும், சமூகக் கண்ணோட்டம் உள்ள நிறுவனங்களும் இதில் பங்கேற்க, ஈஷா வித்யா ஒரு வாய்ப்பைத் தருகிறது. நிலம் நன்கொடையாக தருவதிலிருந்து, பள்ளிக் கட்டமைப்புகள், மாணவர்களின் கல்விச் செலவு, கணிணி மையம், விளையாட்டு வசதிகள், பள்ளிப்புத்தகங்கள் மற்றும் ஊட்டச்சத்து உணவு போன்ற ஏதாவது ஒன்றிற்கு பொறுப்பு எடுப்பது வரை பல வகைகளில் உதவ முடியும். இதுவரை கிராமப்புறக் குழந்தைகள் இந்த நவீன அதிவேக உலகின் வளர்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பின்றி இருக்கின்றனர். இந்தநிலையில் நமது ஒருங்கிணைந்த முயற்சியும், உதவியும் இக்குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.