
ஈஷா ஹோம் ஸ்கூல்
ஈஷா ஹோம் ஸ்கூல், சத்குரு அவர்களின் நெடு நாளைய கனவு. கோயம்புத்தூருக்கு அருகில் நீலகிரி மலைத்தொடரின் பசுமைப்பரப்பில் உள்ள, வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைதி கோலோச்சும் சூழலில், இப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி, ஒருவரின் உள்நிலை மலர்ச்சிக்கேற்ற சூழ்நிலையை வழங்குவதால், குழந்தையின் முன்னேற்றம் அனைத்து வகைகளிலும் பரிணமிக்கிறது.
இல்லம் போன்ற ஒரு சூழலில் தரமான கல்வியை வழங்க வேண்டுமென்பதே இப்பள்ளியின் குறிக்கோள். கற்பித்தலோடு, வேடிக்கையும் சாகசமும் கைகோர்த்துச் செல்வதை இப்பள்ளி உறுதி செய்வதால், கற்பது என்பது, பள்ளிக் குழந்தைகளுக்கு, கண்டுபிடிப்பும், ஆனந்தமும் கொண்ட ஒரு செயல்முறையாக இருக்கிறது. இப்பள்ளி ஒரு விதத்தில் கூட்டுக் குடும்ப முறையை ஒத்திருக்கிறது. எப்படி ஒரு கூட்டுக்குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் தனித்தன்மையோடு அதேநேரத்தில் பல வயது கொண்ட மற்றவர்களோடு இணைந்து குடும்பம் வெற்றிகரமாக நடக்க உதவுகிறார்களோ அதே போல் இப்பள்ளியில் உள்ள குழந்தைகளும் தனித்தன்மையோடு அதே நேரத்தில் மற்றவர்களோடும் இயைந்து செல்வதாகவும் உள்ளனர்.
இப்பள்ளியில் சர்வதேச தரத்தில் உள்ள ஆசிரியர்களைக் கொண்டிருக்கும் இப்பள்ளி, ஒரு குழந்தையிடம் இயல்பாகவே உள்ள கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை தூண்டி விடுகிறது. மேலும் வெறுமனே கல்வி கற்பிப்பதை மட்டும் மேற்கொள்ளாமல், வாழ்க்கை மதிப்பீடுகள் மற்றும் வாழ்வியலுக்கான திறமைகளை குழந்தைகளின் மனதில் பதிய வைப்பதில் இங்கு கவனம் செலுத்தப்படுகிறது.
"குழந்தைகளை குழப்பமற்ற, தெளிவான புத்திசாலித்தனத்துடன் உருவாக்குவதே கல்வி எனப்படுகிறது. ஒருவர் மதம், கொள்கை அல்லது தவறான அபிப்பிராயம் போன்றவைகளுடன் அடையாளப்படுத்திக் கொள்ளாமலும், சிக்கிப் போகாமலும் இருக்கும்போது, அவரது புத்திசாலித்தனம் இயல்பாகவே அவரை உச்சபட்ச மலர்ச்சியை நோக்கி வழி நடத்தும்" - சத்குரு
|