ஈஷா வர்த்தகம் (பிசினஸ்) (பி) லிட்
ஈஷா அறக்கட்டளையானது, அன்பும், அக்கறையுமுள்ள சில தனிநபர்களின் ஆரம்ப கட்ட நிதியுதவியைக் கொண்டு சில சமூகநலத் திட்டங்களை நடத்தி வருகிறது. விளைவுகள் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தாலும், தற்போதைய தேவைகளில் ஒரு மிகச்சிறிய அளவையே ஈடு செய்கிறது. இந்த சமூகநலத் திட்டங்கள் அதிகபட்ச பலன்களைத் தரவேண்டும் என்றால், தொடர்ந்த நிதியுதவி தேவைப்படுகிறது.
ஈஷா அறக்கட்டளையின் வளர்ந்து வரும் சமூக நலத்திட்டங்களுக்கு நிலையான நிதி ஆதாரங்களை அளிக்கும் நோக்கத்துடன், ஈஷாவின் வணிக முயற்சியாக, ஈஷா பிஸினஸ் பிரைவேட் லிட் (IBPL) நிறுவப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட், பொறியியல், இன்டீரியர் டெகரேஷன், வீட்டுப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களை உருவாக்குதல், மற்றும் உணவு உற்பத்தி போன்ற துறைகளில், புதுமையான முறையில், வணிக முயற்சிகளைத் துவக்குவதும் மற்றும் விரிவுபடுத்துவதும் ஈஷா வர்த்தகத்தின் நோக்கமாக உள்ளது.
பல்வேறுவிதமான பின்புலங்களிலிருந்தும், தொழில் நுணுக்க அனுபவங்களிலிருந்தும் வருகின்ற தொழில் முனைவோர் மற்றும் வெவ்வேறு வாழ்க்கைப் பாதைகளில் இருக்கும் தன்னார்வத் தொண்டர்கள் பொறுப்பேற்று நடத்தும் ஈஷா வணிகமானது, வர்த்தகத்தோடு சமூக உணர்வையும் இணைத்துச் செயல்படுத்த வேண்டிய அவசியத்தை வலுயுறுத்துகிறது. மேலும் இந்த வணிக முயற்சிகளில் திரட்டப்படும் லாபமானது, ஈஷா அறக்கட்டளையின் ஆரோக்கிய, சுற்றுச்சூழல் மற்றும் கல்வி அமைப்புகளான கிராமப்புத்துணர்வு இயக்கம், பசுமைக்கரங்கள் திட்டம் மற்றும் ஈஷா வித்யா திட்டங்களுக்கு செலவிடப்படும்.
மேலும் விபரங்களுக்கு :
சுந்தரம் ஐயர்
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்