Tsunami Relief

சுனாமி மீட்பு மற்றும் மறுவாழ்வு

2004-ஆம் வருடத்தின் டிசம்பர் மாதத்தில் 26-ம் நாளன்று தாக்கிய சுனாமிப் பேரலை ஏற்படுத்திய எதிர்பாராத கோர மரணங்கள் மற்றும் அழிவுகளால் துயருற்ற மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட, தமிழக கடலோர மாவட்டங்களில் ஏற்கெனவே செயலாற்றிக் கொண்டிருந்த ஈஷா மையங்கள், வெகு வேகமாக முன்வந்தது. சிதம்பரம், கடலூர் மற்றும் பெரும் நாசங்களைச் சந்தித்த வெள்ளங்கோவில் மற்றும் நாகப்பட்டினம் கிராமங்களில் வாழ்வின் அனைத்து மட்டங்களிலுமுள்ள ஆயிரக்கணக்கான ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் மீட்பு முகாம்களை முதல் நாளிலிருந்தே இயக்கினர். அதன் மூலம் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உணவு, தங்குமிடம், தரமான மருத்துவ உதவி மற்றும் பாதிக்கப்பட்டோரின் மனநலன் மீட்க மனோதத்துவ முறையிலான ஆலோசனைகள் ஆகியவை வழங்கப்பட்டன. அழிவின் பாதிப்பிலிருந்து மீண்டு எழுவதற்காக என்றே, அவர்களுக்கு, தனியாக வடிவமைக்கப்பட்ட ஈஷா யோக வகுப்புகள் நிகழ்த்தி, உடல்ரீதியான, மனோரீதியான வலிமையைத் தரக்கூடிய கருவிகள் வழங்கப்பட்டன.

மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளில் நேரடியாக பங்கேற்கும் முகமாகTsunami Relief சத்குரு பலமுறை பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று தேவையான வழிகாட்டுதல்களைக் கொடுத்தும், அவற்றை மேற்பார்வையிட்டும் வந்தார். ஒரு முழுமையான மருத்துவர் குழு மற்றும் மருந்துகளோடு 8 நடமாடும் மருத்துவமனைகளும், ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்களும் உடனடியாக பாதிக்கப்பட்ட கடலோர பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் நிவாரணப் பணிகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயலாற்றியதில் ஈஷா அறக்கட்டளை நான்கு கிராமங்களைத் தத்தெடுத்து, ஒரு மாதிரி மறுவாழ்வுத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றியது. அதனால் பயன்பெற்றவர்கள் மற்றும் மாநில நிர்வாகத்தினரால் ஒருங்கே பெரும் பாராட்டைப் பெற்றது. மேலும் 60 கடலோர கிராமங்களில் கிராமப்புத்துணர்வுத் திட்டத்தை அமல்படுத்துவதற்காக, நடமாடும் மருத்துவமனைகள் நிரந்தரமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

சுனாமி பேரழிவு நிகழ்ந்த 30 நாட்களில் பாதிக்கப்பட்டோருக்கான நிரந்தர வீடுகளைக் கட்டி முடித்து முதன்முதலில் ஈஷா அறக்கட்டளை வழங்கியது. சத்குரு அவர்களாலேயே புதுமையான முறையில் வடிவமைக்கப்பட்ட கட்டிட அமைப்புடைய வீடுகள் நெருப்பு, பூகம்பம், புயல், சுனாமி அலை ஆகியவற்றை எதிர்த்து நிற்கவல்லதாக பல நிறுவனங்களும் சான்றிதழ் அளித்துள்ளன. மேலும் கடலோரக் கிராமத்தினரின் ஒரே வாழ்வதாதாரமாக விளங்கும் படகுகளின் அவசரத் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக படகு தயாரிக்கும் கட்டுமானப் பிரிவு ஒன்று, ஈஷா யோக மைய வளாகத்திலேயே அமைக்கப்பட்டது. பேரழிவினால் இழந்து விட்ட படகுகளை உருவாக்குவதில் தன்னார்வம் மிக்க பொறியாளர்களும் மற்றும் அது தொடர்பான தொழில் முனைவோரும் பெருமளவு உதவி செய்தனர்.

ஒரு பிரமாண்ட அளவிலான மரம் நடும் திட்டம் மற்றும் பசுமைக் கரங்கள் திட்டத்தின் மூலமாக பசுமைப்பரப்புகள் உருவாக்கும் செயல் முறைகள், சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோரக் கிராமங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இன்று வரையிலும் இயங்கிக் கொண்டுள்ளது.

Tsunami Relief Tsunami Rehabilitation Tsunami Rehabilitation Tsunami Rehabilitation Tsunami Rehabilitation Mobile Health Clinics Mobile Health Clinics
"நாசம் விளைவிக்கக்கூடிய பேராபத்து என்றால் என்னவென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மாபெரும் அலை வந்துவிட்டது என்பது பேராபத்து அல்ல. ஆனால் அதனால் மனித உயிர்கள் இழப்பு ஏற்பட்டது என்பதுதான் பேராபத்து. தங்களது குடும்பத்தை மக்கள் இழப்பதென்பது ஆபத்தானது. யாரோ ஒருவர் தனது வாழ்வதாரத்தை இழந்துவிட்டார். யாரோ தமது வீட்டை இழந்து விட்டார். அது ஆபத்து. யாரோ சிலருக்கு இன்றைய இரவுக்குக் கூட உணவு இல்லாமல் போய்விட்டது. இது பேராபத்து. வெளிப்புறச் சூழ்நிலையில் மட்டும் இது ஒருவருக்கு ஆபத்தை உருவாக்குவதில்லை. ஒருவர் வெளிப்புறத்தில் அனுபவிக்கும் துன்பத்தைக் காட்டிலும் தனக்குள்ளேயே உருவாக்கிக் கொள்ளும் துன்பமே பெரிய துன்பபமாக உள்ளது. சில உணவுப் பொட்டலங்கள் வந்து சேர்ந்து விடலாம், அதனால் அவன் பசியும் அடங்கி விடலாம். ஆனால் சில புதிய நடைமுறைகளால் வீடிழந்து, வீதியோரங்களில் சாப்பிட நேரும் அவலம் மற்றும் அவனுடைய குடும்பம் கண்ணெதிரே மறைந்து போன துயரம்.... இதுதான் உண்மையான அழிவு, வலி." - சத்குரு


 
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • TwitThis
  • StumbleUpon
  • Technorati
  • Google
  • YahooMyWeb
 
ISHA FOUNDATION
Isha Foundation - A Non-profit Organization © Copyright 1997 - 2022. Isha Foundation. All rights reserved
Site MapFeedbackContact UsInternational Yoga DayGuru Purnima 2019 Privacy Policy Terms and Conditions