தீர்த்த குண்டம்

கோவில் கட்டுமான அறிவியலின் படி, புராதன சக்தி மிகுந்த கோவில்களிலெல்லாம் புனிதமான தீர்த்தங்கள் இருந்திருக்கின்றன. இங்கு, கோயிலுக்கு வருபவர்கள் புனித நீராடிய பின்னரே கோயிலுக்குள் செல்வார்கள். இது வெறும் சுத்தத்திற்காகவும், புத்துணர்ச்சிக்காக மட்டும் அல்லாமல், கோயிலுக்கு வருபவர்களின் சக்தி உடலை தூண்டி விட்டு அவர்களை கோயிலுக்குள் இருக்கும் அருளை முழுமையாக பெற தயார்ப்படுத்துவதற்கே ஆகும்.

தியானலிங்கத்தின் வெளி பிராகரத்தில் வட திசையில் இருக்கும் புனித நீர்தான் தீர்த்தகுண்டம் என்றழைக்கப்படுகிறது. சத்குருவால் சக்தியூட்டப்பட்ட, தனித்துவம் வாய்ந்த இந்த குளம் கோவிலுக்கு வருபவர்களுக்காக 29 மார்ச் 2006 அன்று துவக்கி வைக்கப்பட்டது. தியானலிங்கம் கோயில் கட்டப்பட்ட முறையிலேயே, வளைகூரை வடிவில், கட்டப்பட்ட இத்தீர்த்தகுண்டம், பலருக்கு ஆழமான ஆன்மீக அனுபவங்களை கொடுத்திருக்கிறது. இதன் கட்டுமானத்தில் எளிமையான இயற்கை பொருட்களும், வண்ணத்திற்கு மண் பூச்சுமே உபயோகப் படுத்தப்பட்டுள்ளன.

இந்த செவ்வக வடிவ குளம், கிரானைட் கற்களால் 30 அடி ஆழத்தில் கட்டப்பட்டுள்ளது. பெரிய அளவிலான படிகள் கொண்ட இந்த தீர்த்தகுளத்தின் வளைந்த மேற்கூரையில், மஹாகும்பமேளாவை சித்தரிக்கும் வண்ணமயமான ஓவியங்கள், பல வெளிப்பாடுகளுடன் உள்ளன. கேரளாவில் 15-ம் நூற்றாண்டில் கோவில் சுவர்களையும் அரண்மைன சுவர்களையும் அலங்கரித்து வந்த இத்தகைய ஓவியங்கள் இயற்கை வண்ணங்கள் மற்றும் காய்கறி சாயங்கள் கொண்டு வரையப்பட்டது.

இந்த தீர்த்த குண்டத்தில் உள்ள நீர், அதில் மூழ்கியுள்ள 660 கிலோ எடையுள்ள ரசலிங்கத்தால் சக்தியூட்டப்படுகிறது. இந்த தீர்த்த குண்டத்தில் மூழ்கி எழுந்தால் ஒருவரது ஆன்மீக அதிர்வுகளைப் பெறும் தன்மை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அவரது உடலும் புத்துணர்வு அடைகிறது.

 
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • TwitThis
  • StumbleUpon
  • Technorati
  • Google
  • YahooMyWeb
 
ISHA FOUNDATION
Isha Foundation - A Non-profit Organization © Copyright 1997 - 2020. Isha Foundation. All rights reserved
Site MapFeedbackContact UsInternational Yoga DayGuru Purnima 2019 Copyright and Privacy Policy Terms and Conditions