தியானலிங்கம் யோகத் திருக்கோயில்
- யோக அறிவியலின் சாரம்
“தியானம் பற்றி ஏதும் அறியாதவர் கூட, தியானலிங்கத்தின் சக்தி எல்லைக்குள் சில நிமிடங்களுக்கு அமைதியாக அமர்ந்திருக்கும்போது, ஆழமான தியானத்தன்மையை அனுபவப்பூர்வமாய் உணர முடியும்.” - சத்குரு


சமஸ்கிருத மொழியில், 'த்யான' என்றால் தியானம் என்பதும், லிங்க என்றால் வடிவம் என்பதும் பொருள்.

தியானலிங்கம், ஒரு தனித்துவமான சக்தி உருவமாக, யோக அறிவியலின் சாரமாக, கடந்த 2000 வருடங்களில் முழுமையடைந்த முதல் தியானலிங்கமாக விளங்குகிறது.

தியானலிங்க யோகத் திருக்கோயில் எந்த ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை முறையையும் சாராமல், எந்த விதமான சடங்குகள், பிரார்த்தனை மற்றும் வழிபாடுகளின் தேவையின்றி ஆழமான தியானத்தன்மையை வழங்கும் இடமாக உள்ளது. மத வேறுபாடுகளைக் கடந்து, மனிதகுலம் ஒருங்கே அமைதி, வளர்ச்சி மற்றும் நல்வாழ்வு அமையப் பெறுவதற்கான மிக அரிய சக்திவாய்ந்த வாய்ப்பினை வழங்குகிறது. தியானலிங்கத்தின் அதிர்வூட்டும் சக்திப்பிரவாகமானது, ஒருவரை அமைதி மற்றும் நிச்சலனத்தின் ஆழமான நிலையை உணரச் செய்து, வாழ்வின் அடிப்படையான இயல்பை வெளிப்படுத்துகிறது.

கோயிலின் நுழைவாயிலில் நிறுவப்பட்டுள்ள 'சர்வதர்ம ஸ்தம்பம்' ஒருமையின் அடையாளமாக விளங்கும் வண்ணம், பல்வேறு மதங்களாகிய இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், சமணம், தாவோயிஸம், ஜோராஸ்ட்ரினியஸம், ஜுடாயிஸம், புத்தமதம் மற்றும் ஷின்டோ ஆகியவற்றின் சின்னங்கள் பொறிக்கப்பட்டு வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் வரவேற்புப் பத்திரத்தை வாசித்து நிற்கிறது.

உலகளாவிய முக்கியத்துவம் மற்றும் மத ஒருமைப்பாடு இவைகளை உருவாக்கி முன்னெடுத்துச் செல்லும் குறிக்கோளுடன், வருடம் முழுவதும் தனித்துவமான செயல்பாடுகளை தியானலிங்கம் வழங்குகிறது. வெவ்வேறு நாடு மற்றும் கலாச்சாரப் பின்னணியிலிருந்து வருகின்ற, திறமையான பாடல் குழுவினரால் அளிக்கப்படுகின்ற சொற்களற்ற ஓசைகளை அர்ப்பணிப்பது தினசரி ஆராதனைகளில் அடங்குகிறது. இத்தகைய உச்சாடனைகள், தியானலிங்க வளாகத்தின் தியானத்தன்மையை உள் வாங்குவதற்கு துணை செய்கிறது.

ஈஷா யோக மையத்தின் மையப் புள்ளியாகத் திகழும் தியானலிங்கத் திருக்கோவில் தியானம் நிகழ்த்துவதற்கான சிறந்த இடமாக, உலகளாவிய அளவில் புகழ் பெற்றுள்ளது.

தியானலிங்கம் குறித்த அதிக விவரங்களுக்கு, www.dhyanalinga.org -க்கு வருகை தாருங்கள்.


 
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • TwitThis
  • StumbleUpon
  • Technorati
  • Google
  • YahooMyWeb
 
ISHA FOUNDATION
Isha Foundation - A Non-profit Organization © Copyright 1997 - 2022. Isha Foundation. All rights reserved
Site MapFeedbackContact UsInternational Yoga DayGuru Purnima 2019 Privacy Policy Terms and Conditions