காலண்டர்

தியானலிங்க யோகத் திருக்கோயில் தியானம் செய்வதற்கான ஓர் இடம். இந்த கோவிலில் தீவிரமாக அமைதி அனுஷ்டிக்கப்படுகிறது.

கோவில் தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரைக்கும் இடைவேளையின்றி திறந்திருக்கும். கோவையிலிருந்து 30 கி.மீ தொலைவில், வெள்ளியங்கிரி மலைச்சாரலில் உள்ள ஈஷா யோக மைய வளாகத்தில் இத் திருக்கோவில் அமைந்துள்ளது. கோவை நகரம், இரயில், வான், சாலை ஆகிய வழிகளில் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ~>

தினசரி நிகழ்வுகள்:

நாத ஆராதனை தினசரி ஸந்தியா காலங்களாகிய காலை 11.50 முதல் 12.10 வரையிலும், மாலை 5.50 முதல் 6.10 வரையிலும் நாத ஆராதனை நடைபெறுகிறது. இசைக் கருவிகளின் ரீங்காரம், வார்த்தைகளற்ற குரலிசை மற்றும் மத்தள இசை இவைகளைப் புனைந்து புதிய பரிமாணத்தில், மைய அன்பர்களால், தினசரி நாத ஆராதனை அர்ப்பணிக்கப்படுகிறது. நாத ஆராதனை, தியானலிங்கத்தின் அதிர்வுகளை மேலும் தீவிரத்தோடு பெற வழி வகுக்கிறது.

ஓங்கார தீட்சை தியானலிங்கத் திருக்கோவிலுக்கு வருகை தருபவர்களுக்கு தினமும் ஓங்கார மந்திரத்தில் தீட்சை வழங்கப்படுகிறது. இந்த எளிய மந்திரத்தை தொடர்ந்து செய்து வரும்போது, ஒருவரின் உடல் மற்றும் மனம் வலிமை பெறுவதோடு, சமநிலையையும் அளிக்கிறது. ஓங்கார தீட்சை தினசரி மதியம் 12.30 மணி முதல் 1.10 மணி வரையில் விருப்பமுள்ள அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

மாத நிகழ்வுகள்

பஞ்ச பூத ஆராதனை: பஞ்ச பூத ஆராதனை: இந்த உடலையும் சேர்த்து எல்லா படைப்புக்கும் அடிப்படையானது பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, வெளி ஆகியவையே. நமது கட்டமைப்பிலுள்ள பஞ்ச பூதங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்வதைப் பொறுத்து, நமது உடல் மற்றும் மனநலன் அமைகிறது. பஞ்ச பூத சுத்திகரிப்பினால், ஒருவரது உடல் , அவருடைய உச்சபட்ச நலனுக்கான படிக்கட்டாக அமைகிறது. பஞ்சபூதங்கள் சுத்திகரிப்பிற்காக, பூத சுத்தி என்றழைக்கப்படுகிற யோக விஞ்ஞானமே இருக்கிறது. மேலும் ~>

அமாவாசை - பௌர்ணமி: ஆத்ம சாதகருக்கு அமாவாசை - பௌர்ணமி ஆகிய நாட்கள் முக்கியமானவை. அந்த நாட்களில் மனித உடலின் சக்தி நிலை இயல்பாகவே மேம்பட்ட தன்மையில் இருக்கிறது. அந்த நாட்களில் வருபவர்கள், தங்கள் கரங்களாலேயே தியானலிங்கத்திற்குப் பாலும், நீரும் அர்ப்பணிக்கும் அரிய பேற்றினைப் பெறுகிறார்கள்.

காலை 11.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை பாலும், நண்பகல் 12.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீரும் அர்ப்பணிக்கப்பட்டு வருகிறது.

அமாவாசையன்று சக்திநிலை ஆண்களுக்கு உகந்ததாக இருப்பதால் அவர்கள் தியானம் செய்வதற்காக, அமாவாசை இரவு அன்று கோயில் இரவு 1.00 மணி வரை திறந்திருக்கும். அதுபோல பௌர்ணமியன்று முழு நிலவின் அதிர்வுகள் பெண்களுக்கு உகந்ததாக இருப்பதால், அவர்கள் தியானம் செய்வதற்காக பௌர்ணமி இரவு 1.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

தேதிகள்

வருடாந்திர நிகழ்வுகள்:

மஹாசிவராத்திரி திருவிழா இவ்விழா ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது. இரவு முழுவதும் சத்குரு அவர்கள் முன்னிலையில் தீவிரமான தியானம், துடிப்புமிக்க கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய இசைக்கலைஞர்களின் இன்னிசை என்று வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அறிவியல் அடிப்படையில் மஹாசிவராத்திரி இரவில் கோள்களின் அமைப்பின்படி முதுகுத்தண்டை நேராக வைத்திருப்பது ஒருவரை தியானநிலைக்கு எளிதில் அழைத்துச் செல்கிறது. மேலும் ~>

அர்ப்பணிப்புகள்: அன்பர்கள், தியானலிங்கத்திற்கு பூமாலை அர்ப்பணிப்பு செய்யலாம். அவர்களுக்கு வேண்டிய நாளில், அர்ப்பணிப்பு செய்ய அவர்கள் முன்கூட்டியே கோவில் வரவேற்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கோவிலில் பயன்படுத்தக்கூடிய பூக்கள், ஊதுபத்தி, விளக்குகளுக்கான எண்ணெய், வார இறுதியிலான பிரசாத வினியோகம் ஆகியவற்றிற்கும் அன்பர்கள் நன்கொடை வழங்கலாம்.

Tel: (0422) 2515345 Email: இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

 
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • TwitThis
  • StumbleUpon
  • Technorati
  • Google
  • YahooMyWeb
 
ISHA FOUNDATION
Isha Foundation - A Non-profit Organization © Copyright 1997 - 2020. Isha Foundation. All rights reserved
Site MapFeedbackContact UsInternational Yoga DayGuru Purnima 2019 Copyright and Privacy Policy Terms and Conditions