தன்னார்வத் தொண்டர்களின் பகிர்தல்கள்

Isha Prison Program Volunteers Share

Their Experiences

யோக வகுப்ப்பினால் சிறைச்சாலையில் அமைதி மலர்ந்தது - வில் கிரிஃபின்
Humility and Thankfulness - by Rubka Tamarat
Inner Freedom - by Carolyn Reese
Amazing Grace - by Doug Longmore
Bars - No Bar - by Krishnan Venkatraman


யோக வகுப்ப்பினால் சிறைச்சாலையில் அமைதி மலர்ந்தது
- வில் கிரிஃபின்

An account of Sadhguru Jaggi Vasudev and Inmates, Inner Freedom for the Imprisoned - Prison Yoga Program, Luther Luckett Correctional Complex, LaGrange, KY, USA

கான்க்ரீட் சுவர்களும், கூடங்களும், தரைகளும், இரும்புக் கதவுகளும் தங்களுடைய சிறிய இடங்களில் முடங்கிக் கிடக்கின்ற சிறைவாசிகளுக்கு வெறுமையைத்தான் வழங்குகின்றன. தங்களுடைய வாழ்க்கையை கடுமையான தினசரி வேலைகள் மற்றும் வரையறைக்குட்பட்ட வாய்ப்புகளுக்குள் குறுக்கிவிட்ட ஒரு மோசமான தேர்வைச் செய்து விட்ட மனிதர்கள் இவர்கள். வெளிச் சூழ்நிலைகளின் பால் இவர்களுக்கு இருக்கக்கூடிய ஆதிக்கத்தை இழந்து விட்டார்கள். ஆனால் அவர்களுக்குள்ளாகவே உள்நிலையில் வித்தியாசமாக இருப்பதை உணரும் விதமான ஒரு வாய்ப்பு, அமெரிக்க சிறைச்சாலைகளின் கதவுகளைத் தட்டுகிறது. பென்சில்வேனியா மற்றும் கென்டகி சிறைச்சாலைவாசிகளின் வாழ்வை மாற்றத்தக்க ஒரு நிகழ்வை இந்திய யோக குருவான சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் வழங்குகிறார். கடுமைமிக்க இந்திய சிறைச்சாலைகளில் கடுமையிலும் கடுமையானவர்களை மனிதர்களாக மாற்றிய ஒரு வகுப்பு அமெரிக்காவில் வழங்கப்படுவது இதுவே முதல்முறை. கடந்த 10 ஆண்டுகளாக முக்கியத்துவம் பெற்ற இந்த யோகி, தன்னுடைய சக்திவாய்ந்த ஒருமுகப்பட்ட செயல்முறைகளை தென்னிந்திய சிறைகளுக்கு அறிமுகம் செய்து முரட்டுத்தனம் மிக்கவர்கள் அமைதி நிரம்பியவர்களாகவும், தூங்கவே இயலாதவர்கள் அமைதியான தூக்கம் வரப்பெற்றதாகவும், கலவரத்துடனிந்தவர்கள் சாந்தமடைந்ததையும் கண்டதோடு, கடந்த 130 வருடங்களில் தனிமைச் சிறைகள் ஆட்களின்றி தேவையற்றுப் போனதும் நடந்துள்ளது. இந்தளவுக்கு இறுகிப்போன வாழ்க்கையால் பலத்த காயத்திற்குள்ளானவர்களுக்கு யோகா என்ன அளிக்க முடியும்? 2002-ன் ஒரு உஷ்ணமான கோடைக்காலத்தில் கென்டகி சிறைச்சாலைக்குள், ஒரு வாரகாலம் நிகழ்ந்த வகுப்பில் நடந்த சில அனுபவங்களின் தொகுப்பு.

சத்குரு அவர்கள் ஒரு வருடம் முன்பாகவே குறுகிய கால வருகையின் போது சிறைச்சாலை ஊழியர்களுக்கும், சிறைவாசிகளுக்கும் தன்னைப் பற்றியும், தான் செய்து வரும் பணிகள் குறித்தும் அறிமுக உரை நிகழ்த்தி அடித்தளமான முன்னேற்பாடுகளைச் செய்திருந்தார். இதனால் ஏறக்குறைய 50 சிறைவாசிகள் அவர்பால் ஈர்க்கப்பட்டு, ஒரு வாரகால வகுப்பிற்கும் யோகா செய்வதற்கும் தயார் நிலையில் இருந்தனர். மெலிந்த தேகமும், சராசரி உயரமும் உள்ள இவர், மிகவும் சோர்வுற்ற மனிதனின் கவனத்தையும் கவரும் வகையான கம்பீரமும், திறமையும், தலைமையேற்று வழிநடத்தும் தன்மையுடனும் இருந்தார். பண்டைக்கால இந்திய யோகியின் நீண்ட தாடியுடன் இருந்த இவரின் கண்கள் பிரகாசமாகவும், சிறைபிடிப்பது போலவும் இருந்ததுடன், அவரின் பேச்சு கூர்மையான நோக்கமும், தெளிவும் கொண்டிருந்தது.

தங்களின் சிறைக் கம்பிகளை உடைத்தெறியும் தாகம் மற்றும் சிறையோடு இறுக்கமாகப் பிணைத்துள்ள சக்திகளுக்கிடையேயான மன இறுக்கத்தை வரையறுக்கும் கட்டற்ற குழப்பத்துடன் சிறைவாசிகள் வகுப்பிற்குள் நுழைந்தனர். ஒரு விசாலமான உடற்பயிற்சிக் கூடத்தில் வகுப்பு நடந்தது. தன் நாற்காலியில் அமைதியுடன் அமர்ந்த சத்குருவின் அருகில் ஒரு மைக் மட்டுமே இருந்தது. மற்றவர்கள் கேட்கக்கூடிய அளவுக்கான கனிவான குரலிலேயே பேசிய அவர் மறுக்க முடியாத காரணரீதியாக கேள்விகளை எழுப்பியதன் வாயிலாக, அங்கிருந்தவர்களை சிறிது சிறிதாக ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தார். அவரின் கேள்விகளுக்கு பதில் கூறுவதன் மூலம் அவர்கள் பங்கேற்க வேண்டும் என்ற வலியுறுத்தலின் மூலமாகவும் அனைவரையும் வகுப்பின் செயல்முறைகளுக்குள் கொண்டு வந்து விட்டார். மேலும் அவர்கள் தம் மறுப்பைத் தெரிவிக்கவும், அவர்களுக்குள் எழுந்த உணர்வு எத்தகையதாயினும், அதை வெளியிட அனுமதித்தார். அவர்கள் கோபம் கொண்டாலும் கூட பரவாயில்லை. எழுந்து நின்று அவரைப் பார்த்து கத்தியபிறகு மறுபடி அமர்ந்து வகுப்பைக் கவனிக்கலாம் என்றார். பங்கேற்பாளர்களிடையே சந்தேகம், வெறுப்பு, பரபரப்பு, ஆயாசம், நம்பிக்கை, ஆர்வம் என்று பல உணர்வுகளின் கலவை அங்கே தென்பட்டது. ஆண்களில் பலதரப்பட்டவர்களாக இளைஞர் முதல் முதியவர் வரை கடுமையான கட்டுக்கடங்காத போக்கிரித்தனமானவர்கள் முதல் மெலிந்த தேகமுடைய எதையும் சொல்ல விரும்பாத எச்சரிக்கை உணர்வுள்ள ஆண்கள் வரை சமூகத்திற்கு ஒரு ஆபத்தான கொலைகாரக் கூட்டம், போதை விற்பனையாளர்கள், பெண்களிடம் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் திருடர்கள் என்று அறியப்பட்டவர்களாக இவர்கள் இருந்தார்கள். ஆனால் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களுக்கு மட்டும் அந்த சிறைவாசிகள் ஆனந்தமாகவும், அமைதியாகவும் வாழக்கூடிய வாய்ப்புப் பெற்ற மனிதர்களாகத் தெரிந்தனர்.

இந்த மனிதர்களை அவர்கள் நிலை பெற்றிருந்த இடத்திலிருந்து அவர்களுக்குள்ளேயே பொதிந்துள்ள ஒரு புதிய இடத்திற்கு நகரச் செய்வதற்கு அவர்கள் தங்களுக்குள் அரண்போல எழுப்பியிருந்த கருத்துக் குவியலின் படிமானத்தை ஒவ்வொன்றாக மெதுவாக உரித்தெறியும் செயல்முறை அங்கே அரங்கேறியது. எவருமே 24 மணி நேரமும், நல்லவர்களாகவோ, அல்லது 24 மணி நேரமும் தீயவர்களாகவோ இருப்பதில்லை என்று வகுப்பில் ஆசிரியர் கூறியபோது, கடுமையான ஓர் இளைஞன் குறுக்கிட்டு தான் 24 மணி நேரமும் கெட்டவன்தான் என்று கூறினான். ஆசிரியர் அந்த இளைஞனை அழைத்து அவருக்கு முன்னால் அருகாமையில் அமருமாறு கூறினார். தயக்கமுற்ற அந்த இளைஞன் முன்னால் வந்ததும், அனைவரின் கவனமும் அவன் மீது படிந்திருக்கையில் கனிவு கலந்த நகைச்சுவை தொனிக்கும் வகையில் பேசிய ஆசிரியர், இந்த அளவுக்கு வெளிப்படையாக தான் முழுவதும் கெட்டவன் என்று தைரியத்தோடும், நேர்மையாகவும் கூறி இருப்பது ஒன்றே அவருக்குள் நல்லகுணம் இருப்பதைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுக் கூறினார். குழப்பமடைந்தாலும், அந்த இளைஞனின் முகத்தில் தென்பட்ட பரவசம் தீயவன் என்ற அவனுடைய அடையாளம் புதிரவிழ்ந்ததை சந்தேகத்திற்கிடமின்றி காட்டியது. அந்த குழுவினருக்கு இந்தச் செயல்முறை மிகவும் தீவிரமானதாகவும், சவால் நிறைந்ததாகவும் இருந்தது. அவர்களின் எண்ணப்போக்கிலுள்ள முன்னுக்குப்பின் முரணான தன்மைகளைச் சுட்டிக் காட்டும் மிக நீண்ட அளவிலான பேச்சுப் பரிமாணத்திற்குப்பின், அவர்களின் உடல் புத்துணர்வு பெறக் கூடிய விளையாட்டுக்கான நேரம் வந்தது. அவர்களின் வழக்கமான தினசரி முறையிலிருந்து சற்று மாறுபட்டதாக பரஸ்பரம் ஒவ்வொருவரும் வேடிக்கையும், ஒற்றுமையும் இணைந்த ஒரு நிலையில் குதூகலமான அனுபவத்தை உணர வைக்கும் வகுப்பின் இலேசான கணங்களைக் கொண்டதாக இருந்தது. சிறைவாசிகள் தெளிவு பெற்ற இன்னொரு விஷயம், இந்த யோகி வெளிப்பார்வைக்குக் காணப்படுவது போல உள்நிலையில் அவ்வளவு இலேசானவர் அல்ல என்பதுதான். அவர் விளையாட்டில் முழுமையாக தீவிரமாக ஈடுபட்ட நிலையில் அவர் வீசிய பந்து காற்றில் பறந்தபோது தென்பட்ட அசுர வேகம், அவர் முகத்தில் காணப்பட்ட சாந்தமான தோற்றத்திற்கு முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. விளையாட்டு முடிவுறும் தருவாயில் சிறைவாசிகளின் பார்வையில் இந்த புதுமையான மனிதரின் பால் மரியாதை தெளிவுற உயர்ந்திருந்ததோடு, அவர்கள் புத்துணர்வோடு அடுத்த நாளின் நிகழ்வை எதிர்கொள்ள ஆயத்தமாகி இருந்தனர்.

சிறைவாசிகளை அடுத்து எதிர்கொண்டது பொறுப்புணர்ச்சி. பொறுப்புணர்ச்சியானது, அவர்களது உடல் மற்றும் மனம் ஆகிய எல்லைகளைத் தாண்டி பரந்து விரிந்துள்ள ஒன்று என்ற கருத்தினை சத்குரு வாசுதேவ் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். எந்த சூழ்நிலையிலும் உலகத்தின் மீது அவர்கள் பொறுப்புணர்ச்சி கொள்ள முடிந்தால், பிறகு தங்களுக்கும், மற்றவர்களுக்கும் அவர்கள் உயிரோட்டமாக செயல்பட்டு, வாழ்வின் நிகழ்வுகளுக்கு வெறுமனே பிரதிபலிப்பதைக் காட்டிலும் அதற்குத் தக்க பதிலியாக இருப்பது எவ்வாறு என்பதன் சாத்தியக்கூறுகளை அவர்கள் காண முடிந்தது. அந்த அணுகுமுறையினால் ஒவ்வொரு கணமும் ஆனந்தமான மனிதராக இருப்பதற்கான வாய்ப்பைப் பெறுகின்ற திறன் அவர்களுக்கு ஏற்படுகிறது. சூரிய நமஸ்காரம் கற்றுக் கொண்டதன் மூலம் யோகப் பயிற்சியின் இன்னொரு அம்சத்தினை அவர்கள் துவங்கினார்கள். இந்த 12 நிலைகளை உள்ளடக்கிய பயிற்சி அவர்களுடைய முழு உடலுக்கும் வேலை கொடுத்து, அந்த நாளை எதிர்கொள்வதற்கான சக்திகளைத் தட்டியெழுப்புகிறது. சூரிய நமஸ்காரத்திற்குப் பிறகு சவாசனத்தில் அவர்கள் ஓய்வு கொண்டனர். தரையில் கைகளை அகலவிரித்து முகம் மேல் நோக்கியிருக்க மல்லாந்த நிலையில படுத்திருந்தது அவர்களின் வாழ்வில் முதன்முறையாக அவர்கள் தம்முடைய கடந்த கால அனுபவங்களிலிருந்து தான் யார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அதற்கும் உண்மையிலேயே இந்தக் கணத்தில் தான் யாராக இருக்கிறோமோ அதற்கும் இடையிலான ஒரு சிறிய இடைவெளியை உணர்வதற்கான வாசலாக இருந்தது. அந்த அறையில் நிலவிய நிசப்தம் குறிப்பிடத்தக்கதாக இருந்ததுடன் இந்த கடினமான மனிதர்களை யோகா மாற்றத் துவங்கிவிட்டது தெளிவாகப் புலப்பட்டது.

தொடர்ந்து வந்த நாட்களில் சத்குரு விடுத்த தர்க்கரீதியான சவால்களும், யோகப் பயிற்சிகளும், புத்துயிரூட்டும் விளையாட்டும் மாறி மாறி நிகழ்ந்தன. சில முத்திரைகளோடு இணைந்த மூச்சுப் பயிற்சிகளும், எளிய சப்தங்களை சாதகர் எழுப்புவதையும் கற்றுக் கொண்ட சிறைவாசிகள் யோக சக்தியினுள் ஆழமாகச் சென்று உடலின் சக்தியை மாற்றியமைக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றனர். ஒவ்வொருடைய உயிர்சக்திகளும் இந்த உலகில் எவ்விதம் பிரயோகிக்கப்படலாம் என்று முடிவெடுக்கக்கூடிய திறனை இது அதிகரிக்கிறது. தயக்கம், எச்சரிக்கையுணர்வு, அமைதியற்ற நிலை இவற்றிலிருந்து அவர்கள் ஆர்வமும், விருப்பமுமான விளையாட்டுத்தன்மைக்குள் வளர்ந்து காலையில் வகுப்பு துவங்குவதற்கான ஆயத்தங்களிலிருந்து தங்களுக்கான இடத்தை நாடி அமர்வது வரை நிஜமாகவே உற்சாகத் துள்ளலில் இயங்கினர். தங்களுடைய ஆசானிடமிருந்து பெற்ற ஊக்கத்தினால், சிறைவாசிகள் மிக விரைவிலேயே மனம் ஒன்றியதோடு அவர்களுக்கு அளிக்கப்பட்ட மாபெரும் பரிசின் தன்மையை நன்கு உணர்ந்திருந்தனர். 5-ம் நாள் காலைப்பொழுதில், அனைவரும் அமைதியோடும், தியானத்தன்மையோடும் கூடி வகுப்பின் அடுத்த கட்டத்திற்குச் செல்லக் காத்திருந்தனர்.

கால அவகாசம் மிகவும் குறுகியதாக இருந்தாலும் பொருளார்ந்த சக்தி நிரம்பிய அதே நேரத்தில் எளிமையாக தினமும் செய்யக்கூடிய பயிற்சிகளை சத்குருவால் சிறைவாசிகளுக்கு அளிக்க முடிந்தது. அவர்கள் தங்களின் எதிர்ப்புக் கணங்களைக் கட்டுப்படுத்திய விதமும், தங்களின் கருத்துக்களை சவாலாக எதிர்கொண்டதும், அவர்களுக்கும் பழக்கமே இல்லாத விதங்களில் உடலை நிலைநிறுத்த அளித்த ஒத்துழைப்பும், ஊக்கமும், உற்சாகமும் அளிப்பதாக இருந்தது. அவர்கள் கடும் முயற்சி எடுத்து, பொறுப்புணர்வுடன் யோகப் பயிற்சிகளை மேற்கொண்டதன் பலனை வெகு விரைவில் உணர்ந்தனர்.

இறுதிநாளின் காலையில் சத்குருவின் வழிகாட்டுதலில் அவர்கள் முழுப் பயிற்சியையும் மேற்கொண்டனர். முதல் நாள் வகுப்பில் அவர்களைக் கண்டிருந்த எவருக்குமே ஒரு வார காலத்தில் அவர்களிடம் காணப்பட்ட மாற்றம் ஆச்சரியமாகவும், இதயத்தை நெகிழ வைப்பதாகவும் இருந்திருக்கும்.

குழப்பமுடனும், கலவரமுடனும், ஒற்றுமையின்மையுடனும் ஒருவருக்கொருவர் இடித்துத் தள்ளி தன்னைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருந்த அந்த மனப்பாங்கு காணாமல் போயிருந்தது. இந்த மனிதர்கள் அமைதியுடனும், ஒருமித்தும் இருந்ததோடல்லாமல் அனைவரின் நோக்கமும் ஒன்றுபட்டதின் சங்கமம் காற்றில் கலந்திருந்தது போன்றிருந்தது. அவர்களனைவரும் தமக்குள்ளே புதிதாக ஏதோ ஒன்றை உணர்ந்து கொண்டிருந்தனர். அவர்களுடைய பின்புல வரலாறு புறந்தள்ளப்பட்டு உண்மையில் அவர்கள் தாம் யார்? என்பதை உணர்ந்தனர்.

ஒரு வார நிகழ்ச்சி அமைதியோடும், நெகிழ வைக்கும் சடங்குகளோடும் நிறைவுக்கு வந்தபோது, ஒவ்வொருவரும் சத்குருவிடம் சென்று ஆசிகளை பெற்றுக் கொள்ள அழைக்கப்பட்டனர். பயணத்தின் துவக்கத்தில், அவர்கள் கற்பனையில் கூட எட்டியிராத அளவுக்கு மிக அதிகமாக அள்ளி வழங்கிய அவரின் ஆரத்தழுவும் அரவணைப்பைப் பரிசாகப் பெற்றுக் கொள்வதற்காக, அவர்கள் ஒவ்வொருவரும் அமைதியாக, ஆழமான நன்றி உணர்வுடன் அவரை நோக்கி நடந்தனர். அவர்கள் தங்களுக்குள்ளே இறைத்தன்மையின் துளியை அனுபவித்தனர்.

வில் கிரிஃபின், ஈஷா அறக்கட்டளையின் தன்னார்வத் தொண்டர், நாஷ்வில், டென்னஸி.

 
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • TwitThis
  • StumbleUpon
  • Technorati
  • Google
  • YahooMyWeb
 
ISHA FOUNDATION
Isha Foundation - A Non-profit Organization © Copyright 1997 - 2020. Isha Foundation. All rights reserved
Site MapFeedbackContact UsInternational Yoga DayGuru Purnima 2019 Copyright and Privacy Policy Terms and Conditions