சிறைவாசிகளின் பகிர்தல்கள்

 " யோக வகுப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் நீண்ட காலமாக யோகப் பயிற்சிகள் செய்து வருகிறேன். இந்த அளவு சக்தி வாய்ந்ததும், மிக அருமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டதுமான இவ்வகுப்பில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். வகுப்பில் அளிக்கப்பட்ட விவரங்கள் எளிமையாகவும், சுருக்கமுடனும் இருந்தமையால், நான் பெரிதும் பயனடைந்தேன்." - ஸ்காட் ரெய்னெர்ட்
 
"'தான்' என்ற அகந்தையை முன்னிலைப்படுத்தும் வாழ்க்கை பயனற்றது. மனம் கொள்ளும் அகங்காரமானது மற்றும் கோபத்தைக் காட்டிலும் மிக மோசமானது. ஈஷா யோக மையத்தினால் எனக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட பயிற்சிகள் என்னுள் இருந்த மாயைகளை அழித்து, என்னை ஒரு மனிதனாக மாற்றியுள்ளது." - கே. மோகன் ராஜ், சிறைவாசி.
 
"நான் மிகவும் அமைதியாக, ஓய்வாக இருப்பதாக உணர்கிறேன். சத்குருவின் போதனைகளும், தியானங்களும் மிகவும் முக்கியமானவை. நான் மிகுந்த சக்தி கிடைத்தது போலவும், என்னுடைய ஏற்றுக் கொள்ளும் தன்மை அதிகரித்துள்ளதாகவும் உணர்கிறேன்." - டேவிட் பீர்
 
"அன்பு என்றால் என்னவென்பதைப் புரிந்து கொள்தற்கு, யோகா வகுப்பு எனக்கு உதவியது. இப்போதெல்லாம், எல்லாவற்றிற்குமான என்னுடைய பதில் ஒரு புன்னகை மட்டுமே" - கோவை மத்திய சிறைவாசி.
 
"நான் இப்போது சற்றே இலேசானது போலவும், அதிகம் அன்பும், கருணையும் கொண்டிருப்பது போலவும் உணர்கிறேன். ஏதோ ஒரு நம்பிக்கை முறையோ அல்லது மதம் போலவோ இல்லாமல், அது ஒருவரை உள்முகமாகப் பார்க்கக் கற்றுத் தருவதோடு, வாழ்க்கையோடு இயைந்து வாழச் செய்கிறது." - சாகரி க்ராஃபோர்ட்
 
"என் வாழ்க்கையில் எப்போதும் நான் எதிர்ப்பு குணமுள்ளவனாகவும், கோபமுள்ளவனாகவும், அனுசரித்துப் போகாதவனென்றும், கருதப்பட்டு வந்திருக்கிறேன். இந்த வகுப்பு, என்னுடைய வேறுபட்ட உணர்ச்சிகளையும், குணங்களையும் மறுபரிசீலனை செய்ய உதவியுள்ளது. இந்த வகுப்பு எனக்கே இந்தளவுக்கு உதவக்கூடுமென்றால், இதே போன்ற சூழ்நிலையிலுள்ள மற்றவர்களுக்கும் இது உதவ முடியும் என்று நான் நம்புகிறேன். இந்த வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்." - டேனில் லயான்ஸ்
 
"நான் என்னுடைய உணர்ச்சிகளையும், முடிவுகளையும் எந்த வெளிச்சக்திகளும் கட்டுப்படுத்த இப்போது அனுமதிப்பதில்லை.நான் விரும்பும் மனநிலையில் இப்போது என்னால் இருக்க முடியும் என்று உணர்ந்துள்ளேன். என் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை இப்போது எளிதாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஒரு மனிதனாக மேலும் முன்னேற்றம் அடைந்திருக்கிறேன்."
 
"என்னையும், இந்த உலகையும் குறித்த அதிக அக்கறை கொண்டவனாக மாறியுள்ளேன். உயிரோட்டமாக உணர்கிறேன். நான் எங்கிருந்தாலும் இந்த வகுப்பு எனக்கு விடுதலைக்கான ஒரு பாதையாக இருக்கும். மிகவும் குறுகிய நேரத்தில் எனக்கு நீங்களனைவரும் மிக அதிகமான விஷயங்களை அளித்துள்ளீர்கள். நீங்கள் கற்றுக் கொடுத்த பயிற்சிகள் ஏற்கனவே என் வாழ்க்கையில் மிகவும் நேர்மறை வேறுபாட்டினை உருவாக்கியுள்ளது. நீங்கள் என்னோடு பகிர்ந்து கொண்ட யோகாவை நான் என்னாலியன்ற அளவு நல்லவிதமாகச் செய்து வருவேன். நீங்கள் செய்யும் இந்த செயல், வாழ்வதற்குரிய சிறந்த இடமாக இந்த உலகை உருவாக்கும். உங்களது வெற்றிக்கும், மகிழ்ச்சிக்கும் எனது வாழ்த்துக்கள்." - மார்க் மாம்
 

"புதிய வாழ்வு அளித்தமைக்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும்." - வில்ஃபோர்ட் கேட்ஸ்.

"இப்போது இந்த இடத்தை நான் சிறையாக உணரவில்லை. என் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இடமாக உணர்கிறேன். இந்தச் சிறையானது கானல் நீரல்ல. தாகம் தணிக்கும் குளமாக இருக்கிறது."- கோவை மத்திய சிறைவாசி

"சிறைவாசத்திலிருந்து ஒரு ஆறு நாட்கள் தப்பித்திருக்கவே நான் இங்கு வந்தேன். ஆனால் என் வாழ்வின் ஒரு பகுதியையே இது மாற்றிவிட்டது. என் கோபம் சற்றுக் குறைந்துள்ளதை உணர்கிறேன்." - ஆடம் டூரான்

"ஒரு குறிப்பிட்ட முறையில்தான் வாழ வேண்டும் என்று உணரும் மக்கள் இருக்கின்றனர். விரும்பிய விதமாக வாழலாம் என்று நினைக்கும் சில மக்களும் உண்டு. நான் இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்து, சிறைக்கு வந்து அடைந்து விட்டேன். இந்த ஆன்மீக அறிவியலானது பொறுப்புணர்வோடும், முழுமையாகவும் வாழும் வழியை இப்போது எனக்கு காண்பித்துள்ளது." - ஆர். குமார்.

"இந்த யோகாவை உணர்ந்த பிறகு, அன்பும், மனிதநேயமும், அருமையான மாற்றங்களை வாழ்க்கைக்குள் கொண்டு வரும் என்பதை நான் உணர்கிறேன்." - கோவை மத்திய சிறைவாசி.

"என்னுடைய உள்நிலையோடு நான் தொடர்பு கொள்ளவும், வாழ்வை வித்தியாசமான முறையில் பார்த்து அணுகவும், எனக்கு உதவியதற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்." - ரையான் க்ராஹாம்

"என் மனிதில் தணிக்க இயலாத நெருப்பாக இருந்த வருத்தமும், கோபமும் இறந்துவிட்டது. இந்த மனதை அமைதிப்படுத்தவும், நான் மேலும் வக்கிரமடைவதிலிருந்து என்னைத் தடுக்கவும், யோகப் பயிற்சி உதவியது." - கோவை மத்திய சிறைவாசி.

"என் உள்நிலையோடு தொடர்பு ஏற்பட எனக்கு உதவியதற்கும், படைத்தவனை நெருங்கிச் செல்ல வைத்தமைக்கும் என்றென்றும் நான் நன்றியோடிருப்பேன்." - ஃபிரான்ஸிஸ் ஹீடன்.

"பரம்பரை விரோதம் மற்றும் பழிவாங்கும் எண்ணத்திலிருந்து யோகா என்னை மாற்றிவிட்டது." - கோவை மத்திய சிறைவாசி.

"என்னுடைய மன இறுக்கத்தையும், கோபத்தையும் கைவிட வேண்டியே இங்கு வந்தேன். என் மன இறுக்கம் மிகவும் குறைந்துவிட்டது. ஒவ்வொரு கணமும் நான் வாழ்கிறேன். ஒரு புதிய வாழ்க்கை துவங்கியுள்ளது. நான் இந்த வகுப்பை அனைவருக்கும் சிபாரிசு செய்கிறேன். இது நன்றாக வேலை செய்கிறது." - -ஸ்காட் சாலீ.

"இந்த உண்மையை நான் அறிந்திருந்தால் இங்கு வந்திருக்க மாட்டேன். ஆனால் இங்கு வராமலிருந்தால் இந்த உண்மையை நான் அறிந்திருக்க மாட்டேன்." - கோவை மத்திய சிறைவாசி

"என் மேல் நான் தொடர்ந்து மதிப்பு வைக்கவும், என் கடந்த காலச் செயல்களுக்கு நான் பொறுப்பேற்கவும் உதவி செய்தீர்கள். நான் மலர்ச்சியும், புன்னகையுமாக இருப்பதோடு, உள்ளேயும், வெளியேயும் இறுக்கமற்று தளர்வாக உணர்கிறேன். இது ஒரு அற்புதமான அனுபவமாகவும், உண்மையான உள்நிலை அமைதியை விரும்புகின்ற எவருக்கும் இது மாபெரும் வகுப்பாக விளங்குகிறது." - க்ளென் எல். பேர்டு

" எனக்கு பரிவு உணர்ச்சி என்றாலே என்னவென்று தெரியாது. இந்த யோக வகுப்பு எனக்கு பரிவு உணர்வு என்ன என்பதையும் உண்மையான அன்பு கொண்டு பேசுவது எப்படி என்பதையும் காட்டியது." - கோவை மத்திய சிறைவாசி

" முன்பை விட நான் இப்போது சாந்தமாக இருக்கிறேன். மேலும், என் மீதான முழுக் கட்டுப்பாட்டைக் கைக் கொள்ளுவதைக் கற்றுக் கொண்டேன். நான் கற்றுக் கொண்டது என் ஆயுள் வரை நீடிக்கும்." - ஜேம்ஸ் மல்லோரி.

"நான் அதிகம் தெளிவாகவும், , அதிக விழிப்புணர்வோடும், விஷயங்களைத் தெளிவுடன் நோக்கி, சாந்தமாக மற்றவர்களுடன் இணைந்து செயல்படவும் முடிகிறது. என் மனம் வித்தியாசமாக யோசனை செய்வதுடன், அனைத்தையும் புதிய மனோபாவத்துடன் பார்த்து, எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறேன்." - ஜிம்மி தாம்சன்.

"நான் வார்டன்களுக்கு உணவு சமைக்கிறேன். நிறைய தருணங்களில் அவர்களது முகங்களின் மீது உணவை வீசியெறிய வேண்டும் போல உணர்ந்துள்ளேன். ஆனால் இப்போது நான் அவர்கள்பால் அன்பை மட்டுமே உணர்கிறேன்." - கோவை மத்திய சிறைவாசி.

"ஈஷா யோகாவில் கற்றுத் தரப்படும் கருத்துக்கள் எளிமையாகவும், புத்திசாலித்தனமாகவும் உள்ளன. சத்குரு ஜக்கி அவர்கள் இறைத்தன்மை மற்றும் ஆன்மீக ஞானமடைதல் என்று பேசினாலும் அது ஒரு விஞ்ஞானம்தான் என்பதை உறுதிபடக் கூறுகிறார். எந்த மதத்தின் கருத்துக்களையும் பிரதிபலிக்காத வகுப்பாக உள்ளது. இது, விழிப்புணர்வின் மூலமாக வாழ்க்கையை நேர்மறையான முறையில் அணுகின்ற புதிய வழி." - ஸ்டீவ் இம்பெல்லிஜெரி

 
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • TwitThis
  • StumbleUpon
  • Technorati
  • Google
  • YahooMyWeb
 
ISHA FOUNDATION
Isha Foundation - A Non-profit Organization © Copyright 1997 - 2020. Isha Foundation. All rights reserved
Site MapFeedbackContact UsInternational Yoga DayGuru Purnima 2019 Copyright and Privacy Policy Terms and Conditions