சிறைவாசிகளுக்கான உள்நிலை விடுதலை

"உங்களுடைய மகிழ்ச்சியும் நலனும் எவரையும் அல்லது எதையும் சார்ந்திராதபோதுதான் 'நான் ஒரு சுதந்திரமான மனிதன்' என்று உங்களால் கூறிக் கொள்ள முடியும். இல்லையென்றால், நீங்கள் சிறைக்குள் இருப்பதற்கும், வெளியில் நடமாடிக் கொண்டிருப்பதற்கும் பெரிய வித்தியாசமில்லை. இந்தநிலையில், இன்னமும் நீங்கள் ஒரு சிறைவாசியாகத்தான் உங்களுக்குள் இருக்கிறீர்கள் " - சத்குரு
Inner Freedom Inner Transformation Free Yoga Program
சிறைவாசிகளுக்கான உள்நிலை விடுதலை

'சிறைவாசிகளுக்கான உள்நிலை விடுதலை' என்பது, இந்தியாவிலும், அமெரிக்காவிலும் பல இடங்களில் உள்ள சிறைவாசிகளுக்கு அளிக்கப்பட்ட ஒரு இலவச நிகழ்ச்சியாகும். ஆயுள் தண்டனை பெற்ற அநேக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, இந்த நிகழ்ச்சி, உள்நிலை மாற்றத்திற்கான வாய்ப்பளித்து வருகிறது.

'சிறைவாசிகளுக்கான உள்நிலை விடுதலை' வகுப்பு, இந்தியாவின் தமிழ்நாட்டில், கோயம்புத்தூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் முதன்முதலில் துவங்கியது. மற்றவர்களால் எப்போதும் மறக்கப்பட்ட பிரிவினருக்கு தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்ற பேராவல் காரணமாக, சத்குரு அவர்கள், 1992ம் ஆண்டு எட்டுமாதங்கள் தொடர் முயற்சி செய்து, கோவை மத்திய சிறைச்சாலையில் சிறைவாசிகளுக்கு வகுப்பு எடுக்க அனுமதி பெற்றார். முதன் முதலில் நடந்த இந்த வகுப்பிற்குப் பிறகு சிறைவாசிகள் மற்றும் சிறை அலுவலர்களின் ஏகோபித்த உற்சாகத்தினால் இது வேகமாக பரவியது. வகுப்பில் கலந்து கொண்ட ஆயுள்¢தண்டனை சிறைவாசிகள் 67 பேரில் பெரும்பாலானோர் ஒழுக்கமுறை மற்றும் நிர்வாகப் பிரச்சனைகளை அலுவர்களுக்கு ஏற்படுத்தி வந்தார்கள். ஆனால் சத்குருவால் வழங்கப்பட்ட பயிற்சிகளுக்குப் பிறகு, அவர்கள் பெருத்த மாற்றம் அடைந்தனர். ஒழுக்க நடைமுறைகள் சிறையில் பொதுவாகவே முன்னேற்றமடைந்ததோடு, சிறைவாசிகளை காண வருபவர்களும், சிறைவா£சிகளிடம் நல்ல முன்னேற்றத்தைக் கண்டனர். ஆகவே சிறை அதிகாரிகளின் வேண்டுகோளின்படி, தமிழ்நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் இப்போது யோக வகுப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்த வகுப்புகள் மூலம், உள்நிலை மாற்றத்தில் கவனம் செலுத்துவதனால், சிறைவாசிகள், உணர்ச்சி மற்றும் மனத்தில் சமநிலை, பொறுப்புணர்வு, எற்றுக் கொள்ளுதல் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றில் முன்னேற்றம் காண்கின்றனர். இதனால், சிறைவாசத்தின்போது அவர்களின் வாழ்க்கைத்தரம் முன்னேற்றமடைகிறது. மேலும் விடுதலைக்குப் பிறகு, உள்நோக்கிப் பார்ப்பதற்கான கருவிகள் தற்போது அவர்கள் அறிந்திருப்பதால், தங்கள் மன அழுத்தம், கோபம் போன்ற குணங்களை மாற்றிக் கொண்டு மற்றவர்கள் போல் இயல்பான வாழ்க்கையில் ஈடுபட முடிகிறது. மேலும் சிறைவாசிகள் தங்களின் எஞ்சியுள்ள வாழ்நாட்களில் இந்த யோகப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவர முடியும். யோகா வகுப்பில் கற்றுத் தரப்படும் பயிற்சிகள் அனைத்தும், ஆரோக்கியத்திற்கான எல்லா அம்சங்களின் அணுகுமுறையையும் அடிப்படையாகக் கொண்டது. இதனால் அவர்களின் உள்நிலை சமன் அடைவதோடு, துடிப்புடனும் இருக்கும். எனவே, வெளிச் சூழ்நிலையின் பாதிப்பின்றி, அவர்கள், உள் அமைதியுடனும், உள் சுதந்திரத்திடனும் இயங்கமுடிகிறது.

தென்னிந்திய சிறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான சிறைவாசிகளிடம், பிரமிக்கத்தக்க மாற்றத்தினை யோகப்பயிற்சி ஏற்படுத்தியுள்ளது. மிகவும் முரட்டுத்தனமான குற்றவாளிகளாகக் கருதப்பட்ட ஆயிரக்கணக்கான சிறைவாசிகள், தங்களின் உள்நிலை மாற்றத்தை வெளிப்படுத்தி சத்குருவிற்கும், ஈஷா யோகா ஆசிரியர்களுக்கும், கடிதங்களும் கவிதைகளும் எழுதியுள்ளனர்.

'சிறைவாசிகளுக்கான உள்நிலை விடுதலை' - சிறைச்சாலைக்குள் நடத்தப்படும் இந்த யோக வகுப்புகள் - முதன்முறையாக இரண்டு அமெரிக்க சிறைச்சாலை வளாகங்களில், 2002-ல் அளிக்கப்பட்டது. வேமார்ட் எனும் இடத்திலிருக்கும் பென்சில்வேனிய சிறைப் பிரிவிலும் கென்ட்கியின் லாக்ராஞ்ச் என்ற இடத்தின் வேமார்ட், லூதர் சிறைச்சாலையிலும் சுமாராக 50 பங்கேற்பாளர்களைக் கொண்ட இரண்டு வகுப்புகளை சத்குரு நடத்தியபோது, சிறைவாசிகளிடம் பிரமிக்கத்தக்க மாற்றம் உணரப்பட்டது. இதைக் கண்ட சில சிறைக் காவலர்கள் தாங்களும் அந்த வகுப்புகளில் பங்கேற்க வேண்டுமென்று விருப்பம் தெரிவித்தனர். இந்த இரண்டு இடங்களிலுள்ள சிறைச்சாலைகளில் உள்ளவர்களும் வகுப்புகள் அங்கேயே தொடர்ந்து நிகழ வேண்டுமென்று விரும்பியதோடு, பென்சில்வேனியாவில் 27 மற்ற சிறைச்சாலைகளிலும் இந்த வகுப்பினை விரிவுபடுத்துமாறு, பென்சில்வேனிய அரசு அதிகாரிகள் சத்குருவைக் கேட்டுக் கொண்டனர்.

தற்போது அமெரிக்க சிறைச்சாலைகளில், ஈஷா அறக்கட்டளை, தன் முழு செலவில், இந்த வகுப்புகளை நடத்தி வருகிறது. ஆனாலும் அமெரிக்காவின் மற்ற சிறைச்சாலை வளாகங்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக, ஈஷா அறக்கட்டளையானது, இலாப நோக்கமற்ற பிற நிறுவனங்களின் உதவியையும் நாடுகிறது.

 
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • TwitThis
  • StumbleUpon
  • Technorati
  • Google
  • YahooMyWeb
 
ISHA FOUNDATION
Isha Foundation - A Non-profit Organization © Copyright 1997 - 2020. Isha Foundation. All rights reserved
Site MapFeedbackContact UsInternational Yoga DayGuru Purnima 2019 Copyright and Privacy Policy Terms and Conditions