ஈஷாவின் தமிழ் இணையதளம்
ஆனந்தஅலை.காம்
www.AnandaAlai.com | youtube.com/anandaalai | facebook.com/ishayogamaiyam | twitter.com/ishafoundationt
ஒரே க்ளிக்கில்... அமைதி, ஆரோக்கியம், ஆனந்தம். இது ஈஷாவின் தமிழ் இணையதளம். இனி உங்கள் இனியதளமாக...
- நில், கவனி, திருமணம் செய்!
- மாமிசம் சாப்பிடுவது குற்றமா?
- வெற்றி வேண்டுமா இதோ 5 டிப்ஸ்...
- மூக்கடைப்பு போயே போச்சு!!
- காதல் என்பது எதுவரை?
என சத்குருவின் சுவாரஸ்யக் கட்டுரைகள், கேள்வி பதில்கள், வீடியோ பதிவுகள், நேரடி வர்ணனைகள் என அனைத்து ஈஷா நிகழ்வுகளும் உடனுக்குடன் உங்களுக்காக! தமிழில்...
எங்களுடன் இணைந்திருங்கள்!
மிட்நைட்ஸ் வித் த மிஸ்டிக்
www.midnightswiththemystic.com
ஒரு அதிநுட்பமான குருவுடன் நிகழ்ந்த நட்பு உரையாடலின் வசீகரத் தொகுப்பு. எத்தனை முறை நம்மில் ஒவ்வொருவரும், வாழ்க்கையின் ஆழமான கேள்விகளுக்கான பதிலைத் தேடியிருக்கிறோம்? இந்நூலில், இந்தியாவின் அதிகம் தேடப்படுகிற ஒரு ஞானியாகிய சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் பாதங்களில், செரில் சைமன், தன் தனிப்பட்ட அனுபவங்களின் புரிதலை வெளிப்படுத்துகிறார்.
ஈஷா ஷாப்பி
www.ishashoppe.com
ஈஷாவிற்கே உரிய இணையதள அங்காடியாக ஈஷா ஷாப்பி செயல்படுகிறது. இதனால், உங்களுடைய இல்லம் அல்லது அலுவலகத்தில் இருந்த நிலையிலேயே 200-க்கும் அதிகமான ஈஷாவின் உற்பத்திப் பொருட்களை நீங்கள் தேர்வு செய்யலாம். தற்சமயம் இந்தியாவிற்குள் மட்டும்தான் வர்த்தகம் செய்யப்படுகிறது. எதிர்வரும் வருடங்களில் சர்வதேச அளவில் வர்த்தகம் செய்ய திட்டங்கள் உண்டு.
ஈஷா ஷாப்பி சிறப்புகள்:
- ஈஷா வெளியீடுகள் - ஆங்கிலம், தமிழ் மற்றும் பிற மொழிகளில் புத்தகங்கள், குறுந்தகடுகள், டிவிடிகள், ஒலிநாடாக்கள் மூலமாக சத்குருவின் ஞானச் செய்திகள்.
- ஈஷா கைவினைப் பொருட்கள் - மரவேலைப்பாடுகள், கைப்பை, கற்சிற்பங்கள், இயற்கை நார் பொருட்களில் ஆன கூடைகள், தட்டுக்கள், உலோகக் கலைவேலைப்பாடுகள் மற்றும் பல.
- ஈஷா ஆடையகம் - எங்களுடைய சொந்தத் தயாரிப்பிலான இயற்கை இழை ஆடைகள், டி-சர்ட்கள், டாப்ஸ், பாண்ட் போன்றவை (ஆண், பெண் இருபாலாருக்கும்).
சத்குரு
isha.sadhguru.org
சதகுருவின் வாழ்க்கை மற்றும் பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. ஈஷா ஆவணக் காப்பகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிறப்புப் பேருரைகள், சிற்றுரைகள் மற்றும் தொகுப்புகளுடன் தனிப்பட்ட புகைப்படங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் குரு, ஞானி மற்றும் யோகியாக வெவ்வேறு தன்மைகளில் இருக்கும் சத்குருவின் வாழ்க்கை மற்றும் ஞானம் குறித்த ஆழமான புரிதலை இந்த தளம் வழங்குகிறது.
தியானலிங்கம் யோகத் திருக்கோயில்
www.dhyanalinga.org
அநேக ஞானமடைந்தவர்களின் கனவு. ஒவ்வொருவருக்கும் இறைத்தன்மையின் உச்சநிலை வாய்ப்பை வழங்குவதற்காக, சத்குருவால் பிரத்யேகமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த இடமாக தியானலிங்கம் திகழுகிறது. இந்த தனிச் சிறப்பான யோகத் திருக்கோவிலின் நிர்மாணம் குறித்த ஆழமான பார்வையை இந்த தளம் வழங்குகிறது.
கிராமப் புத்துணர்வு இயக்கம்
www.ruralrejuvenation.org
கிராங்களுக்குப் புத்துணர்வூட்டும் வழிகாட்டுதல்களுக்கான இத்திட்டம் இலவச மருத்துவ உதவி மற்றும் கிராம மறுசீரமைப்பினை வழங்குகிறது. நடமாடும் மருத்துவமனைகள், விவசாயிகளுக்கு உழவுத்தொழிலில் உறுதுணை புரியும் செயல்பாடுகள், எய்ட்ஸ் விழிப்புணர்வுத் திட்டங்கள், கிராமப்புறங்களுக்கேயுரிய விளையாட்டுகளுக்கு புத்துயிரூட்டுதல், மூலிகைத் தோட்டங்கள் மற்றும் பாட்டி வைத்திய முறைகள் மூலமாக, இத்திட்டம் தென்னிந்தியாவின் 3,000 ஆதரவற்ற கிராமப்புறங்களை இதுவரை சென்றடைந்துள்ளது. கிராமப்புற இந்தியாவின் அனைத்து மட்டங்களிலும் ஈஷாவிற்குள்ள பொறுப்புணர்வை, இத்தளம் வெளிப்படுத்துகிறது.
பசுமைக்கரங்கள் திட்டம்
www.projectgreenhands.org
தமிழ்நாட்டில் கடந்த 4 வருடங்களில் ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்களின் உறுதுணையோடு 8 மில்லியன் மரங்கள், பசுமைக்கரங்கள் திட்டத்தின் மூலம் நடப்பட்டுள்ளது. மக்களின் ஆதரவோடும், பங்களிப்போடும், இத்திட்டம், தமிழ்நாட்டில் 11.4 கோடி மரக்கன்றுகளை நட்டு, மாநிலத்தின் தற்போதைய பசுமைப் பரப்பை 10% அதிகரிக்க உறுதி கொண்டுள்ளது.
அதிகளவிலான தொழில்மயமாக்கப்பட்ட விவசாயம், உலகத்தின் வெப்ப அதிகரிப்பால் ஏற்பட்ட வானிலையின் சீரற்ற ஏற்றத் தாழ்வுகளினால் பாலைவனமாவது, மோசமான வாழ்க்கை முறைகளைக் கொண்டுள்ள ஏழைகள் மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள கிராமப்புற மக்களின் நிலை ஆகியவற்றுக்கு விடையளிப்பதாக பசுமைக்கரங்கள் திட்டம் செயல்படுகிறது. முரண்பாடான பிரச்சனைகளுக்கு நடைமுறைக்குத் தகுந்த மற்றும் இலக்கை அடையக்கூடியதாக, எளிதான தீர்வினை இது உலகுக்கு அளிக்கிறது.
ஈஷா வித்யா
www.ishavidhya.org
ஆங்கில வழிக்கல்வி மற்றும் கணிப்பொறி அடிப்படையிலான கல்வியை, தமிழக கிராமப்புறங்களில், தாலுக்காவிற்கு ஒன்றாக, 206 புதிய கிராமபள்ளிகளை 2014ம் வருடத்திற்குள் துவங்குவதற்கான முன்னோடித் திட்டம். மிகவும் சாதகமற்ற சூழ்நிலையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான கிராமப்புற இளைய சமுதாயத்தை திறமை பெறச் செய்து இந்தியாவின் பெருகி வரும் பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முனைகிறது இத்திட்டம்.
ஈஷா கல்வி இல்லம் (ஈஷா ஹோம் ஸ்கூல்)
www.ishahomeschool.org
ஈஷா கல்வி இல்லமானது, தரமான கல்வியை இல்லம் போன்ற சூழலில் வழங்கும் குறிக்கோள் கொண்டது. தனிப்பட்ட கல்வி கற்றலுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பதிலிருந்து மாறுபட்டு, ஈஷா கல்வி இல்லம், ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் உள்ள கற்றுக் கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுவதுடன் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை அறிந்து கொள்வதை ஊக்கப்படுத்துவதிலும் திறனை உயர்த்துவதிலும் கவனம் கொள்கிறது. அன்பு, ஒளி, மகிழ்ச்சி பொங்கும் இந்த உலகிற்குள் அடியெடுத்து வாருங்கள்.