ஆனந்த அலை
சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதுதானே உங்களுடைய அத்தனை ஆசைகளுக்கும் அடியில் புதைந்திருக்கும் உண்மை? நீங்கள் கேட்டது கிடைத்துவிட்டது. ஆனால் திருப்தியில்லாமல் அடுத்தது, அடுத்தது என்று ஆசை தாவிக்கொண்டேயிருக்குறது.ஏன் இப்படி?எங்கே தவறு நிகழ்ந்தது? இது உங்கள் குற்றமா அல்லது ஆசையின் குற்றமா?தந்தைக்கு மகன் ஆற்றும் கடமை. மகனைப் படிக்கவைப்பது தந்தையின் கடமை.
நாட்டிற்கு குடிமகனின் கடமை என்றெல்லாம் சொல்லி கடமை என்ற வார்த்தையை உங்களுக்குள் ஆழமாக விதைத்திருப்பார்கள். கடமையைச் செய்வதாக நினைத்து எதைச் செய்தாலும் உங்களுக்கு களைப்புதான் மிஞ்சும்.
Available at Isha Shoppe India
தினம் தினம் ஆனந்தமே
இந்த நூல் என்ற ஆங்கில நூலின் தமிழ்ப் பதிப்பு. சத்குரு பல நகரங்களில் ஆனந்த சங்கமத்தில் பேசிய பேச்சுக்களின் தொகுப்பு கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கிறது, இந்த நூலின் சிறப்பு. சத்குரு அவர்கள் உங்கள் வாழ்க்கையைப் பற்றி வெறுமனே கருத்து சொல்வதோடு நிறுத்துவதில்லை, தீர்வையும் தருகிறார்.
ஆனந்தம் ஒரு எட்டாக்கனியல்ல, தினம் தினம் ஆனந்தம் என்பது சாத்தியமே என்பதை இந்த நூல் உங்களுக்கு நிச்சயம் புரியவைக்கும்.
Available at Isha Shoppe India
ஈஷா ருசி
"நீங்கள் சுவாசிக்கும் காற்று, அருந்தும் தண்ணீர், நடக்கும் பூமி, காணும் தாவரம், உண்ணும் காய், கனிகள் என உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் ஆத்மார்த்தமாக அணுகினால், உங்கள் வாழ்வு மிக அழகாக மாறும்’’ என்பார் சத்குரு. இன்றைய இயந்திர வாழ்க்கையில் நமது உணவுமுறை வெகுவாக மாறிவிட்டது. ஃபாஸ்ட் புட் யுகத்துக்குள் விழுந்துவிட்டோம். நமது உடலை நன்றாக வைத்துக்கொள்ள அக்கறை செலுத்துவதில் மெத்தனமாக இருந்துவிட்டோம்.
எளிதில் நமக்குக் கிடைக்கும் கீரைகள், தானியங்கள், பயிர்கள், பழங்கள், காய்கறிகள் என எவ்வளவோ இருக்க, நாகரிகம் என்ற பெயரில் அற்புதமான பல விஷயங்களை இழந்துவிட்டோம்.
Available at Isha Shoppe India
கடவுள் எங்கே இருக்கிறார்
தெய்வீகத்தை உணர்வது எப்படி? ஆசையும் ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று முரணானதா? சாமியார் என்றால் யார்? யோகத்திற்கும் காமத்திற்கும் அடிப்படை ஒன்றுதான் என்கிறார்களே? போன்ற பல கேள்விகளுக்கு சத்குரு அவர்களின் தீர்க்கமான பதில்கள் இடம் பெற்றுள்ளன.
‘‘கடவுள் எங்கே இருக்கிறார்? அவரை நான் பார்க்கமுடியுமா?’’ போன்ற கேள்விகளுக்கு விடை காணும் ஆவல் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அவர்களுக்கு இந்த நூல் சரியான தேர்வாக நிச்சயம் இருக்கும்.
Available at Isha Shoppe India
ஒரு வினாடி புத்தர்
காட்டுப்பூ இதழ்களில் சத்குரு அவர்களின் எண்ணங்களாக மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் எழுத்தில் வெளிவந்த எழுத்தாக்கத்தின் தொகுப்பே இந்நூல். வாழ்வின் திசைகளை விளக்கிக் கொண்டு விட்டதாய் உள்ளம் கொள்ளும் கர்வத்தின் மீது கல்லெறிகின்றன சத்குருவின் சிந்தனைகள்.
நாம் அறிந்தேயிராத அதிசய உலகங்களின் வாசல் திறக்கும் சத்குருவின் வாஞ்சைமிக்க கருணை வழிந்தோடும் வரிகள் இவை. பிரபஞ்சத்தை தன்னுள் கண்ட பிரம்மாண்டம், பரிவுடன் உணர்த்தும் பாடங்கள் இவை.
Available at Isha Shoppe India
வாழ்க்கை வரமா? சாபமா?
வாழ்க்கை வரமா? சாபமா? என்ற கட்டுரையிலிருந்து… ‘‘நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சரியாக முடிவெடுக்கும்போது சரியான விஷயங்கள் நிகழ்கின்றன. தவறாக முடிவெடுக்கும்போது எல்லாம் தவறாகவே போகின்றன. வெற்றியும் தோல்வியும் இந்த அடிப்படையில்தான் நிகழ்கின்றன. எனவே வலியும் துயரமும் வந்தால் யார் மீது பழியைப் போடலாம் என்று அங்குமிங்கும் பார்க்காதீர்கள்.
உங்களுக்கு நோய் வந்தால் அடுத்தவர்களுக்கா மருந்து கொடுக்கிறீர்கள்? உங்களுக்குத் துன்பம் வந்தால் மட்டும் அடுத்தவர்களை ஏன் காரணம் சொல்கிறீர்கள்?’’ மேலும் ‘அற்பம் முதல் அற்புதம் வரை’, ‘உயிருக்கு விருப்பங்கள் ஏது? எது சாதகம்?’, ‘எது பாதகம்?’ போன்ற 20 கட்டுரைகள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
Available at Isha Shoppe India
|