ஐக்கிய புத்தாயிரமாண்டு அமைதி மாநாடு

துளிர் விட்டிருக்கும் புத்தாயிரமாண்டு, கைகோர்த்திருக்கும் புத்தாயிரமாண்டு உலக அமைதி மாநாட்டோடு புதிய நம்பிக்கை மற்றும் கொண்டாட்டங்களுக்கு மட்டுமல்லாமல் புதிய சிந்தனை மற்றும் செயல்பாடுகளுக்கும் கட்டியம் கூறி வந்துள்ளது. 1000-த்திற்கு அதிகமான வெவ்வேறு மதம் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் பலவிதமான நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரியங்களுடைய உலகின் அனைத்துப் பகுதிகளிளுமிருந்தும் அமைதியை நிலைநாட்ட உறுதி எடுத்துக் கொள்வதற்காக, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில், 2000-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதியிலிருந்து 31ம் தேதி வரை கூடினர்.

உலக மதத் தலைவர்களின் கூட்டமைப்பின் அங்கத்தினராக இருக்கும் சத்குரு, அமைதி மாநாட்டிற்கான ஒரு பிரதிநிதியாக அழைக்கப்பட்டிருந்தார். பலவிதங்களில் இது வரலாற்று முக்கியத்துவமிக்க அபூர்வமான சந்திப்பாக இருந்தது. பலவிதமான நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரியங்களிலிருந்து வந்த தலைவர்களுள், ஒரே கூரையின் கீழ் அமர்ந்து அவரவர் பகுதிகளில் நிலவிய பதற்ற நிலையைக் குறைப்பதற்காக வெளிப்படையாகவும், பொருள் நிறைந்ததுமான விவாதங்கள் நிகழ்த்தியது இதற்கு முன் நிகழ்த்திராதது.

வாழ்வின் வளமிக்க வேற்றுமைகளால் எப்போதும் வசீகரிக்கப்படுகின்ற மற்றும் மக்களைச் சந்திக்கக் கிட்டும் ஒவ்வொரு வாய்ப்பையும் பேராவலோடு அணுகும் மனோபாவம் கொண்ட சத்குரு அவர்கள் மாநாட்டின் அநேக நிகழ்வுகளில் சொற்பொழிவாற்றியதோடு மதம் மற்றும் ஆன்மீகம் குறித்த பல விஷயங்களையும், மதங்களுக்கிடையே இருக்க வேண்டிய பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலின் அவசியம் குறித்த விவாசதங்களிலும் பங்கேற்றார். சத்குருவின் பல ஆலோசனைகள், மிகுந்த பாராட்டைப் பெற்றதுடன், விவாதங்களுக்கான புதிய பரிமாணங்கள் காணப்பட்டன.

மாநாட்டின் மிக முக்கிய பலன்களுள் ஒன்று, மதங்கள் உலகின் அமைதிக்குப் பெரும் பங்காற்றுகின்ற அதே வேளையில், அவைகள், பிரிவினைகளை உருவாக்கவும், வெறுப்பிற்கு உரமிடவும் செய்கின்றன என்ற கருத்து பல மதத்தலைவர்களாலும் அங்கீகரிக்கப்பட்டது. மிகவும் பயங்கரவாதச் செயல்களாகிய வன்முறை, போர் ஆகியவைகளும் சில நேரங்களில் மதத்தின் பெயரால் நிகழ்கின்றன என்ற உண்மையும் நிலவுகிறது. ஆனால் வேற்றுமைகளிலிருந்து அமைதியான முறையில் விலகி நிற்கும் தீர்மானத்திற்கு மாற்றுக் கருத்து வேறொன்று இருக்க முடியாது என்பதை அனைத்து மதத் தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர்.

எல்லைகள் கடந்தும், மற்ற அனைத்து தேசங்களின் ஆன்மீக மற்றும் மதத் தலைவர்களிடையே பேச்சு வார்த்தை மற்றும் ஒத்துழைப்பிற்கான ஒரு கூட்டு உறுதி மொழி எடுத்துக் கொண்டதுடன், 'உலகளாவிய அமைதி உடன்படிக்கை' ஒன்றில் அனைவரும் கையெழுத்திட்டு, மிகவும் முக்கியமான பிரச்சனைகளாகிய எதிர்ப்புணர்வு, வறுமை மற்றும் சுற்றுச்சூழல் போன்றவற்றைக் களைவதில் அனைவரும் கரங்களை இணைப்பதென்று தீர்மானம் பூண்டு கொண்டனர்.

Passion for Peace: My experience at the Millennium World Peace Summit with Sadhguru - Experience of a Volunteer
 
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • TwitThis
  • StumbleUpon
  • Technorati
  • Google
  • YahooMyWeb
 
ISHA FOUNDATION
Isha Foundation - A Non-profit Organization © Copyright 1997 - 2021. Isha Foundation. All rights reserved
Site MapFeedbackContact UsInternational Yoga DayGuru Purnima 2019 Copyright and Privacy Policy Terms and Conditions