ஈஷா யோகா வகுப்புகள்
ஈஷா யோகா வகுப்புகள் மற்றும் ஈஷா புத்துணர்வு(Isha Rejuvenation Retreat) நிகழ்ச்சிகள் ஈஷா யோக மையத்தில் வருடம் முழுவதும் அளிக்கப்படுகின்றன. மேலும் ஈஷா யோக மையத்தில் தங்கியிருந்து செய்யக்கூடிய 3 நாள் உள்நிலை பொறியியல் (Inner Engineering Retreat) வகுப்புகள் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஹட யோகா, சூன்யா தியான வகுப்புகள் அல்லது உயர்நிலை வகுப்புகளான பாவ ஸ்பந்தனா மற்றும் சம்யமா நிகழ்ச்சிகளும் ஈஷா யோக மையத்தில் நடைபெற்று வருகின்றன.. வகுப்புகள் நடைபெறும் தேதிகளை கால அட்டவணையில் தெரிந்து கொள்ள முடியும்.
'அம்' மந்திர தியானம்
தியானலிங்கக் கோயிலுக்கு வருபவர்களுக்கு தினசரி அளவில் தீட்சை வழங்கப்படுகிறது. தொடர்ந்து பயிற்சி செய்துவரும்போது, இந்த எளிமையான தியானம், ஒருவரின் உடல் மற்றும் மனக் கட்டமைப்புகளை பலப்படுத்துவதோடு, அபாரமான சமநிலையையும், ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.
மையத்தில் தினசரி 'அம்' தியானம் நடைபெறும் நேரம்: மதியம் 12.30 முதல் 1 மணி வரை.
ஈஷா கைவினைப் பொருட்கள் விற்பனையகம்
தியானலிங்கத்திற்கு அடுத்து அமைந்திருக்கும் ஈஷா கைவினைப் பொருட்களின் விற்பனைப்பிரிவில் கைகளால்
தயாரிக்கப்பட்ட அழகிய தலையணை உறைகள், தியானத்திற்கான மெத்தைகள், மனம் மயக்கும் வண்ணமயமான கைப்பைகள், ஈஷா டி-சர்ட்கள், சத்குருவின் புத்தகங்கள், டிவிடி மற்றும் சிடிக்கள் போன்றவை விற்பனைக்கு உள்ளது. விற்பனையகத்தில் உள்ள அனைத்து கைவினைப் பொருட்களும் ஈஷா தன்னார்வத் தொண்டர்களால் வடிவமைக்கப்பட்டு உள்ளூர் கிராம மக்களால் உற்பத்தி செய்யப்பட்டது. இதிலிருந்து கிடைக்கும் நிதி ஈஷா அறக்கட்டளையின் சமூகநலத் திட்டங்களுக்குச் செலவிடப்படுகிறது. மேலும்~>
தன்னார்வத் தொண்டர்
எங்களுடைய நிறுவனத்தின் அனைத்து நிலைகளிலும் தன்னார்வத் தொண்டராக இருந்து பணிபுரிய, விருப்பமுள்ளவர்களை, ஈஷா வரவேற்று உற்சாகப்படுத்துகிறது. எங்களின் தேவைகள் காலத்திற்கு காலம் மாறுபடும் நிலையில், உங்களுடைய திறமை, செயல்பாடுகள் மற்றும் உங்களின் ஆர்வத்திற்குப் பொருத்தமாக ஈஷா நிறுவனம் உங்களை உபயோகப்படுத்திக் கொள்ளும். நீங்கள் ஈஷா யோக மையத்திற்கு வருகை தந்து தங்க நேரும்போது, ஒரு தன்னார்வத் தொண்டராக கோவில், சமையல்கூடம், ஈஷா யோகா நிகழ்ச்சிகள், அல்லது ஈஷாவின் ஏதேனும் சமூகத் திட்டங்களில் உதவி செய்ய முடியும்.
மேலும்~>
கொண்டாட்டங்கள்
ஒவ்வொரு ஆண்டும் மஹாசிவராத்திரி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அமைதி, நட்புணர்வு மற்றும் ஒற்றுமையை வளரச் செய்வதில் அடிப்படையாகப் பங்காற்றுகின்ற கலாச்சாரம் மற்றம் பாரம்பரியத்தை நினைவு கூறும் விதத்தில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
. மேலும்~>
அடுத்த மஹா சிவராத்திரி நடைபெறும் நாள்:
2nd March, 2011
|