|
 |
Click photos to enlarge
Click photos to enlarge
Click photos to enlarge
Click photos to enlarge
Click photos to enlarge
Click photos to enlarge
Click photos to enlarge
Click photos to enlarge
Click photos to enlarge
ஈஷா யோக மையம்
தென்னிந்தியாவின் எழில்மிகு இடங்களுள் ஒன்றாகிய வெள்ளியங்கிரி மலைச்சாரலின் அடிவாரத்தில் ஈஷா யோக மையம் அமைந்துள்ளது. அடர்ந்த வனங்களும், மின்மினிப் பூச்சிகளும், வற்றாத நீர்வீழ்ச்சிகளும் வனவிலங்குகளின் உறைவிடங்களும் பின்னணியாகத் திகழும் இது, உள்நிலை மாற்றத்திற்கான சக்தி வாய்ந்த இடமாக உள்ளது. 150 ஏக்கர் நிலப்பரப்பிற்கும் அதிகமாக விரிந்துள்ள இந்த மையம், தியானலிங்கத் திருக்கோவில், ஸ்பந்தா ஹால், ஈஷா புத்துணர்வு மையம், ஈஷா இல்லப் பள்ளி மற்றும் ஈஷா குடியிருப்புகளுடன், ஒருவர் தம் உள்நிலைப் பயணத்தை மேற்கொள்வதற்கு உறுதுணையான ஒரு சூழலை வழங்குகிறது.
முக்கோணக் கட்டிடம்
ஈஷா யோக மையத்தில் ஒரு முக்கோண யந்திரத்தின்(யோகக்குறியீடு) வடிவில், கவனத்தைக் கவரும் நுட்பமான கட்டிட நுணுக்கங்களோடும், கலையம்சத்தோடும், தங்கும் வசதிகளுக்காக ஒரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. யந்திரம் என்பது இறுதிநிலை புரிதலைக் குறிக்கிறது. இக்கட்டிடத்தில் பல நாடுகளைச் சேர்ந்த பிரம்மச்சாரிகள், முழு நேர தன்னார்வத் தொண்டர்கள், விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்க வைக்கப்படுகின்றனர். இங்குள்ள அதிர்வுகள் ஒருவரின் வளர்ச்சிக்குப் பொருத்தமான சூழலாக உள்ளது.
த்ரிமூர்த்தி
50-டன் எடையுள்ள மூன்று கிரானைட் பாறைகளில் செதுக்கப்பட்ட த்ரிமூர்த்தி சிலைகள், ஆயிரக்கணக்கான வருடங்களுக்கும் அதிகமாக, இந்தியாவில் வளர்த்தெடுக்கப்பட்ட சிற்பக்கலையின் அழுத்தமான வெளிப்பாடு. சிவனின் மூன்று வெவ்வேறு பரிமாணங்களைக் குறிக்கும் ஹர, ருத்ர, சதாசிவ என்கின்ற இந்த 3 முகங்கள் உயிரினங்களின் முக்கிய 3 குணங்களை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. பண்டைய வேத அறிவியலில் இந்த குணங்கள் தமஸ், ரஜஸ், சத்வ என்று குறிப்பிடப்படுகின்றன.
ஸ்பந்தா ஹால் 64,000 சதுர அடி பரப்பு கொண்ட இந்த ஸ்பந்தா ஹால், கட்டிட அமைப்பில் தனித்துவமிக்கது. இது தியானக் கூடமாகவும், ஈஷா யோகா மேல்நிலை நிகழ்வுகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தூண்களற்ற மேற்கூரையும், வெண் நிறப் பளிங்குக் கற்களாலான தரையும் கண்களை ஈர்ப்பதாக இருக்கிறது. மேலும் இதன் சுற்றுச் சுவர்களில், இயற்கைச் சாயங்கள் மற்றும் மண் படிமங்களால், ஒரு யோகியின் வாழ்வைச் சித்தரித்து தீட்டப்பட்ட ஓவியங்கள், அனைவரையும் கவர்வதாகவும் பிரமிப்பபைத் தருவதாகவும் உள்ளது. மேலும் 140ஜ்12 அடி அளவிலான இந்தச் சித்திரங்கள் அதன் வகையில் உலகிலேயே மிகப் பெரியதாகும்.
தீர்த்தக்குளம்
இது ஒரு உயிருள்ள லிங்கத்தை கொண்ட ஆழமான மூழ்கும் அளவிலான குளம். இது ஒருவரின் ஆன்மீக அதிர்வுகளைப் பெறத் துணை புரிவதாகவும், ஆரோக்கியம் மற்றும் நலத்தை அளிக்க வல்லதாகவும் இருக்கிறது. யோகத் திருக்கோவிலில் நுழைவதற்கு முன், இந்தக் குளத்தில் மூழ்கி எழுவது, தியானலிங்கத்தின் சக்தி அதிர்வுகளை உள்வாங்குவதற்கு துணை செய்யும். தீர்த்தகுளத்தின் சுற்றுச்சுவர் மிகப்பெரிய கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. நிலப்பரப்பில் 30 அடி ஆழத்தில் உள்ள தீர்த்தகுளத்தின் பகுதியைச் சுற்றிலும் செப்புத் தகடுகள் வேயப்பட்டுள்ளன. தீர்த்தகுளத்தின் மேற்கூரையில் மகா கும்பமேளா வண்ணவேலைப்பாடு கொண்ட ஓவியமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
தியானலிங்கம் யோகத் திருக்கோயில்
தூண்களற்ற, 2,50,000 செங்கற்களாலான அரைக்கோள வடிவ மேற்கட்டமைப்பின் கீழ், தனித்தன்மையான, சக்திவடிவமாக தியானலிங்கம் வீற்றிருக்கிறது. சக்தி பிரவாகமான தியானத்தன்மையிலுள்ள தியானலிங்கம் எந்த ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை முறையையும் சாராமல், எந்த விதமான சடங்குகள் பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகளின் தேவையின்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும், உள்நிலை அமைதி மற்றும் நிச்சலனம் நாடி, ஆயிரக்ணக்கானோர், இந்த தனித்துவமான தியான மையத்தில் கூடுகின்றனர். சத்குரு கூறுவது போல, 'தியானலிங்க சக்தி வளையத்திற்குள் வரும் எவரும் தங்களுள் ஆன்மீக விதை ஊன்றப்படுவதிலிருந்து தப்பிக்க முடியாது'
Vanaprastha Vanaprastha Residential Block offers the possibility of inner growth and well-being for Isha meditators at various stages of family life and old age.
Samadhi The Samadhi marks the spot where Viji, Sadhguru's wife attained Mahasamadhi. This serene, tranquil space invites one to meditate and experience the energies prevailing there.
ஈஷா ஹோம் ஸ்கூல் ஒரு குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவையான தரமான கல்வியை, வீட்டுச் சூழலில் அளிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. உலகின் பல பகுதியைச் சார்ந்தவர்கள் இங்கு பணிபுரிகிறார்கள். குழந்தைகளுக்கு இயல்பாகவே உள்ள அறியும் மற்றும் கற்கும் ஆர்வம் தூண்டப்படும் வகையில் இதன் கற்கும் முறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தக வழிக் கல்வியை விட வாழ்க்கைத் திறன்கள் மற்றும் வாழ்வின் மதிப்பீடுகளை வளர்த்தெடுக்கும் விதமாக இதன் கல்விமுறை இருக்கிறது. இந்த முறையினால், கல்வி என்பது, இங்கு, ஒன்றை ஆராய்ந்து அறிவதாகவும் ஆனந்தத்தை தருவதாகவும் உள்ளது.
ஈஷா குடியிருப்புகள் சுற்றுப்புறச் சூழ்நிலையில், அமைதியைக் கசியவிட்டவண்ணம், செழுமையும், மண் மணமும் இணைந்து, அழகாக வடிவமைக்கப் பட்டுள்ள ஈஷா குடியிருப்புகள், விருந்தினர் மற்றும் பார்வையாளர்களை, தங்கிச் செல்ல ஊக்கமளிப்பதாக உள்ளது. ஈஷாவினால் உருவாக்கப்பட்ட மரத்தினாலான பொருட்களும், உள்புற கட்டமைப்பும் வசதியான, சுகமான, எளிய கிராமிய உணர்வை உறுதி செய்கின்றன. ஒவ்வொரு குடியிருப்பும் ஒன்றிலிருந்து மூன்று நபர் வரை தங்கக்கூடிய விதத்தில், இணைக்கப்பட்ட குளியலறையுடன் முழுமையான தயார் நிலையில் உள்ளது.
ஈஷா புத்துணர்வு மையம் ஈஷா புத்துணர்வு மையம், யோகா, ஆயுர்வேதம், மற்றும் சித்த மருத்துவம் ஆகியவற்றைக் கலந்து தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகளையும் சிகிச்சைகளையும் அளித்து வருகிறது. இவை ஆழமான நச்சுத்தன்மைகளை நீக்குவதாகவும் நாள்பட்ட நோய்களுக்கான தீர்வாகவும் இருக்கிறது. இங்கே வழங்கப்படுகிற நிகழ்வுகள் புத்துணர்வைத் தூண்டி உயிர்சக்திகளை மீட்டு ஆரோக்கியத்தை வழங்குவதாக உள்ளது.
|
|
|
 |
|
|