"ஈஷா என்றால் படைப்புகளின் ஆதாரம் என்று பொருள். கிரியா என்றால் படைப்பின் ஆதாரத்தை நோக்கிய உள்முகப் பயணம். ஈஷா கிரியா என்பது பொய்மையிலிருந்து உண்மைக்கு இட்டுச் செல்லும் மிக எளிமையான, ஆனால் சக்தி வாய்ந்த கருவியாகும்."

- சத்குரு

நல்வாழ்விற்கான தொழில்நுட்பம்

அடுத்தது என்ன?

ஈஷா யோகா அறிமுக வகுப்புகள்

ஈஷா அறக்கட்டளை பல்வேறு விதமான பயிற்சிகளையும், பயிற்சி வகுப்புகளையும் உங்களுக்கு வழங்குகிறது. இவை அனைத்துமே உங்களுடைய ஆன்மீக நல்வாழ்வை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

இன்னர் இன்ஜினியரிங் வகுப்பு, வாழ்க்கையின் உயர்ந்த பரிமாணங்களை ஆராய்வதற்கான தீவிர பயிற்சி வகுப்பாகும். இதன் மூலம் ஒருவர் யோகாவின் உள்நிலை விஞ்ஞானக் கருவிகளைப் பயன்படுத்தி, தன் உள்நிலையில் 'மறுசீரமைப்பு' செய்து கொள்ள முடியும். இந்த வகுப்பை www.innerengineering.com என்ற இணையதளம் மூலமாகவும் கற்க முடியும்.

ஹடயோகா பயிற்சி வகுப்பில் பலவிதமான ஆசனங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இவற்றைப் பயிற்சி செய்வதன் மூலம் ஒருவர் தனது உடல் மற்றும் மனதை தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து, வாழ்க்கை பற்றிய அனுபவங்களை இன்னும் உயர்த்திக் கொள்ள முடியும்.

குழந்தைகளுக்கான ஈஷா யோகா வகுப்புகளில் பல்வேறு கலை, விளையாட்டு மற்றும் எளிமையான யோகப் பயிற்சிகள் கற்றுத் தரப்படுகின்றன. இப்பயிற்சிகளை மேற்கொள்ளும் குழந்தைகளின் மனம் குவிப்புத் திறன், நினைவாற்றல் அதிகரித்து, அவர்களது உடல்-மனதுக்கிடையே நிலவும் ஒருங்கிணைப்பும் மேம்படுகிறது.

பயன்கள்

ஆரோக்கியம்

 • உச்சபட்ச உடல்நலம் மற்றும் உயிராற்றல்
 • மன அழுத்தம் குறைதல்
 • மனத்தெளிவு அதிகரிப்பு, உணர்ச்சிகளில் சமநிலை
 • நாள் முழுவதும் தொடர்ச்சியான, துடிப்பான மனநிலை.
 • தூக்கம் மற்றும் ஓய்வு தேவைப்படும் நேரம் குறைதல்.
 • நாள்பட்ட நோய்களான ஆஸ்துமா, அலர்ஜி, சைனஸ், ஹைபர் டென்ஷன், நீரிழிவு நோய், உடல் பருமன், முடக்கு வாதம், மூட்டு வலி, வலிப்பு நோய், முதுகு வலி, தோல் மற்றும் கண் நோய்கள், ஒற்றைத் தலைவலி போன்றவை வராமல் தடுத்தல்

செயல்பாடுகளில் மாற்றம்

 • மன அழுத்தம் தரக்கூடிய சூழ்நிலைகளைக் கையாளும் திறன் அதிகரித்தல்
 • கவனம், மனம் குவிப்புத் திறன், மற்றும் நினைவாற்றல் மேம்பாடு
 • உற்பத்தித் திறன் மற்றும் செயல்திறனில் உயர்வு
 • மற்றவர்களிடம் தொடர்பு கொள்ளும் திறன் மற்றும் உறவுகளில் முன்னேற்றம்.
 • நாள் முழுவதும் உற்சாகமான செயல்பாடு

அனுபவம்

 • வாழ்க்கையை நேர்மறையான, திறந்த நோக்கத்தோடு அணுகுதல்
 • சொந்த மதிப்பீடுகளையும், வாழ்க்கை லட்சியங்களையும் அலசி ஆராய்தல்.
 • உள்நிலையில் அமைதி மற்றும் நிறைவுத்தன்மையை உணர்தல்
 • தனக்குள் வகுத்துக் கொண்ட கட்டுப்பாடுகளையும், பயங்களையும் கடந்து செல்லுதல்
 • வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் முழுமையாக உணர்ந்து, வாழ்தல்

தொன்மையான, சக்தி வாய்ந்த யோக முறைகளை, நவீனகால மனிதனுக்கு ஏற்ற வகையில் ஈஷா யோகா தேர்ந்தெடுத்து வழங்குகிறது. இதன் மூலம் ஒருவர் தன் உடல், மனம் மற்றும் உணர்ச்சிகளில் ஓர் ஒத்திசைவை உருவாக்க முடியும். உள்நிலை மாற்றத்துக்காக, எளிமையான ஆனால் சக்தி வாய்ந்த ஷாம்பவி மஹாமுத்ரா என்னும் கிரியாவை (உள்நிலை சக்தி செயல்பாடு) ஈஷா யோகா அறிமுகப்படுத்துகிறது.

READ MORE

Innerengineering.com என்ற இணையதளத்திற்கு சென்று இன்னர் இன்ஜினியரிங் வகுப்பை இணையதளம் வாயிலாகவே கற்றுக்கொள்ளுங்கள்.

அடுத்து நிகழவிருக்கும் இன்னர் இன்ஜினியரிங் வகுப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்:
தமிழ்நாட்டில் இந்தியாவில் உலகின் மற்ற பகுதிகளில்

ஹடயோகா

எங்களுடைய மையங்களில் 2-3 நாள் தங்கியிருந்து கற்றுக் கொள்ளும் பயிற்சியான ஹடயோகாவில், சூரியநமஸ்காரம் மற்றும் பலவிதமான ஆசனங்களைக் கற்றுக் கொள்ள முடியும். இந்த வகுப்பில் கலந்து கொள்ள யோகாவைப் பற்றி எந்தவொரு முன் அனுபவமோ அல்லது உடல் தகுதியோ தேவையில்லை

மேலும் விவரங்களுக்கு... | அடுத்து வரவிருக்கும் பயிற்சி வகுப்புகள்

குழந்தைகளுக்கான ஈஷா யோகா வகுப்பு

5-8 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில் 7-14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு, தங்களது மனம் குவிப்புத் திறனையும், நினைவாற்றலையும் அதிகரித்துக் கொள்ள முடியும். அவர்களுடைய சக்திகளை ஒழுங்குபடுத்தி அவர்களை அன்பான, ஆனந்தமான, சூழ்நிலைக்கு பதில் தருபவர்களாக மாற்றுகிறது.

மேலும் அறிந்து கொள்ள... | அடுத்து வரும் பயிற்சி வகுப்புகள்

 
 
ISHA FOUNDATION
Isha Foundation - © 1997 - 2022 Isha Foundation. All Rights Reserved.
Site MapFeedbackContact UsInternational Yoga DayGuru Purnima 2019 View our Privacy Policy