"ஈஷா என்றால் படைப்புகளின் ஆதாரம் என்று பொருள். கிரியா என்றால் படைப்பின் ஆதாரத்தை நோக்கிய உள்முகப் பயணம். ஈஷா கிரியா என்பது பொய்மையிலிருந்து உண்மைக்கு இட்டுச் செல்லும் மிக எளிமையான, ஆனால் சக்தி வாய்ந்த கருவியாகும்."

- சத்குரு

நல்வாழ்விற்கான தொழில்நுட்பம்

ஈஷா யோகாவைப் பற்றி இவர்கள் என்ன கூறுகிறார்கள்...

ஈஷாவின் மிகப் பெரிய சொத்து தன்னார்வத் தொண்டர்கள். அவர்களிடம் மிகப் பெரிய அளவில் ஊக்கமும், தூண்டுதலும் இருக்கிறது. உலகளவில் இவ்வளவு பெரிய ஒரு அமைப்பில் இத்தனை ஊக்கமும் தூண்டுதலும் இங்குதான் இருக்கிறது என நம்புகிறேன். நிதி, கட்டமைப்பு போன்றவற்றில் இதைவிட மிகப்பெரிய அமைப்புகள் இருக்கலாம். ஆனால் இந்த அளவு ஈடுபாடும், பொறுப்பும், நேர்மையும் வேறெங்கும் இருக்க முடியாது. அந்த வகையில் ஈஷா அறக்கட்டளை இணையில்லாதது. - திரு. J.M. பாலமுருகன், ஐ.ஏ.எஸ்.

யோக மையத்தில் அந்த உயர்நிலை வகுப்பில் கலந்து கொண்டபோது... ஓ மை காட்! என்ன அனுபவம் அது! மக்களிடம் எப்படி நேசமாக இருக்க முடியும் என்பதை மண்டையில் அடித்து உணர வைத்த மாதிரி, நமக்கு முக்கியமான ஏதோ ஒன்று தொலைந்து திரும்ப கிடைத்தது போல ஒரு பிரவாகமான உணர்வு. அதன் பிறகு எந்த வேலையையும் ஈடுபாட்டோடு செய்ய ஆரம்பித்தேன். முக்கியமாக குடும்பத்தில் இருப்பவர்களுடன் மிகவும் நெருக்கமாக, பாசமாக இருக்க முடிகிறது. அந்த வகுப்பிற்குப் பிறகு என் வாழ்க்கையே மாறிப் போனது. மிகுந்த வித்தியாசத்தை உணர்கிறேன். ஆனால் இப்படி, இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வகுப்பில் அவர்கள் சொல்வதேயில்லை. அதை நாமாகவே உணர்ந்து கொள்கிறோம். - பாத்திமா பாபு, செய்தி வாசிப்பாளர்

யாரெல்லாம், ஆரோக்கியத்திற்காக மட்டுமின்றி, அதற்கும் மேலான ஒரு நோக்கத்திற்காக யோகாவைக் கற்க வேண்டுமென்று நினைக்கிறீர்களோ, அவர்கள் அதை உடனே செய்யுங்கள். நான் ஏன் இவ்வளவு தாமதப்படுத்தினேன் என்று ஆச்சரியப்படுகிறேன். சத்குருவின் யோக வகுப்புகள் அந்த அளவு என்னை கவர்ந்துவிட்டன. எப்படியாவது அடுத்த வகுப்பு கேன்சல் ஆகாதா என்று ஒரு முறை கூட நான் நினைக்கவில்லை. அது மட்டுமல்ல, ஒவ்வொரு முறை வகுப்பு முடிந்து வெளி வந்தபோதும் மேலும் கருணையுள்ளவனாக மாறியிருந்தேன். உடல்நலத்திற்கும் அதிகமான ஒரு இலக்கோடு யோகாவை அணுகும்போது அது வாழ்க்கையையே திருப்பிப் போடும் அனுபவமாக இருக்கிறது. அற்புத உணர்வில் இருக்கிறேன். - சேகர் கபூர், பாலிவுட் டைரக்டர்

எல்லையை உணர்ந்த பின்னும் எளிமையின் சிகரமாய், உயிர்களை மலர்த்தும் உதயமாய் நம்மிடையே உலாவரும் சத்குருவை சந்திக்காமல் இருந்திருந்தால், சாரமற்ற வாழ்க்கையையே வாழ்ந்திருப்பேன். ஈஷா யோகா மையத்தின் நிர்வாகிகளுடனும், தியான அன்பர்களுடனும் கலந்து பழகாமல் போயிருந்தால் பணிவு என்னும் தன்மையினை முற்றாக இழந்திருப்பேன். ஈஷாவின் பயிற்சிகளை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் ஆரோக்கியத்தையும், ஆனந்தத்தையும் விட்டு வெகு தூரம் விலகியிருப்பேன். பொதுவாழ்வில் இன்று நான் கண்டு வரும் சிறப்புகள் அத்தனையும் சத்குருவின் கருணையாலும், ஈஷா யோக வகுப்புகள் தந்த பக்குவத்தாலும் நிகழ்பவை. - கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா

சத்குரு நமது தமிழ்நாட்டிற்குக் கிடைத்த வரம்! இந்த வரத்தை நமது ஆட்சியாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்வதும், இளைய சமூகம் இவரை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்வதும் நாட்டிற்கும், வீட்டிற்கும் நல்லது என்பது என் நம்பிக்கை - பட்டுக்கோட்டை பிரபாகர், எழுத்தாளர்

உங்கள் ஈஷா கிரியா அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்


Please let us know your name.

Invalid Input

Invalid Input

 
 
ISHA FOUNDATION
Isha Foundation - A Non-profit Organization © Copyright 1997 - 2019. Isha Foundation. All rights reserved
Site MapFeedbackContact UsInternational Yoga Day View our Copyright and Privacy Policy