ஈஷா கிரியா என்றால் என்ன?
இன்று, பெரும்பாலான மக்கள், 'யோகா' என்றால் உடலை பலவிதமாக வளைப்பது, தலைகீழாக நிற்பது என்று நினைக்கிறார்கள். யோக அறிவியல் பல பரிமாணங்கள் கொண்டது. உடல்நிலையில் செய்யும் யோகா அதில் ஒரு பகுதி மட்டுமே. யோகா என்பது, உடல் மனம் இரண்டையும் உச்சபட்ச திறமைக்குக் கொண்டு செல்லும் தொழில்நுட்பம். இதன் மூலம் ஒருவர் தன் வாழ்வை முழுமையாக வாழமுடியும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சொட்டு ஆன்மீகமாவது வழங்கவேண்டும் என்பது, தன்னை உணர்ந்த ஞானியும், யோகியுமான சத்குரு அவர்களின் நோக்கம். முற்காலத்தில் யோகிகளுக்கும் துறவிகளுக்கும் மட்டுமே சாத்தியமாக இருந்த ஆன்மீக வாய்ப்புகள், இப்போது ஒவ்வொரு மனிதரும் அவரவர் வீட்டில் இருந்து கொண்டே செய்யும் வகையில் வழங்கப்படுகிறது.
ஈஷா கிரியா என்பது மிகவும் எளிமையான ஆனால் சக்தி வாய்ந்த பயிற்சியாகும். யோக அறிவியலின் மிகத் தொன்மையான அறிவுப் பெட்டகங்களிலிருந்து சத்குரு அவர்கள் இதனை வடிவமைத்து வழங்குகிறார். "ஈஷா" என்பது படைத்தலின் ஆதாரத்தைக் குறிக்கும்; "கிரியா" என்றால் உள்நிலையில் செய்யப்படும் செயல். ஈஷா கிரியாவின் நோக்கமே, ஒவ்வொருவரையும், தன் உயிரின் மூலத்துடன் தொடர்பு கொள்ளச் செய்வதுதான். அதன் மூலம் ஒவ்வொருவரும் தன் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும். தினமும் ஈஷா கிரியா பயிற்சி செய்வதன் மூலம் உடல்நலம், உற்சாகம், அமைதி, நல்வாழ்வு போன்றவற்றைப் பெறமுடியும். இது, இன்றைய அவசர யுகத்தின் வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சக்தி வாய்ந்த கருவி.
ஈஷா கிரியா எளிமையான மற்றும் சுலபமான ஒரு பயிற்சி. மேலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இப்பயிற்சிக்காக தினமும் சில நிமிடங்கள் ஒதுக்கினாலே, அது உங்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும். இங்கு நீங்கள் பார்க்கப்போகும் வீடியோவில் எல்லா குறிப்புகளும் வழங்கப்படுகின்றது. அந்தக் குறிப்புகளைக் கேட்டு பயிற்சி செய்ய முடியும். கம்ப்யூட்டர் மூலம் அந்தக் குறிப்புகளை டவுன்லோடும் செய்து கொள்ள முடியும்.
சத்குரு பற்றி
Visit Isha.Sadhguru.org
Visit IshaFoundation.org
சத்குரு, தன்னை உணர்ந்த யோகி, ஞானி, மனிதநேய ஆர்வலர், கவிஞர் மற்றும் மிகவும் வித்தியாசமான ஆன்மீக குருவாக விளங்குபவர். அவருடைய வாழ்வும் பணிகளும், ஒவ்வொரு மனிதனும் தன் உள்தன்மையின் அடியாழத்தில் இருக்கும் அமைதியை, ஆனந்தத்தை, அனுபவப்பூர்வமாக உணர்வதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளன. 'ஒரு சொட்டு ஆன்மீகம்' மூலம் ஒவ்வொருவரும் தம் வாழ்வில் மலர்ச்சி பெற்று, தன் விதியை தன் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது சத்குருவின் நோக்கம், விருப்பம்.
Follow:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
அடிக்கடி தோன்றும் கேள்விகளுக்கான பதில்களை இங்கே படிக்க முடியும்.
ஈஷா யோகாவைப் பற்றி இவர்கள் என்ன கூறுகிறார்கள்...
ஈஷாவின் மிகப் பெரிய சொத்து தன்னார்வத் தொண்டர்கள். அவர்களிடம் மிகப் பெரிய அளவில் ஊக்கமும், தூண்டுதலும் இருக்கிறது. உலகளவில் இவ்வளவு பெரிய ஒரு அமைப்பில் இத்தனை ஊக்கமும் தூண்டுதலும் இங்குதான் இருக்கிறது என நம்புகிறேன். நிதி, கட்டமைப்பு போன்றவற்றில் இதைவிட மிகப்பெரிய அமைப்புகள் இருக்கலாம். ஆனால் இந்த அளவு ஈடுபாடும், பொறுப்பும், நேர்மையும் வேறெங்கும் இருக்க முடியாது. அந்த வகையில் ஈஷா அறக்கட்டளை இணையில்லாதது.
- திரு. J.M. பாலமுருகன், ஐ.ஏ.எஸ்.
யோக மையத்தில் அந்த உயர்நிலை வகுப்பில் கலந்து கொண்டபோது... ஓ மை காட்! என்ன அனுபவம் அது! மக்களிடம் எப்படி நேசமாக இருக்க முடியும் என்பதை மண்டையில் அடித்து உணர வைத்த மாதிரி, நமக்கு முக்கியமான ஏதோ ஒன்று தொலைந்து திரும்ப கிடைத்தது போல ஒரு பிரவாகமான உணர்வு. அதன் பிறகு எந்த வேலையையும் ஈடுபாட்டோடு செய்ய ஆரம்பித்தேன். முக்கியமாக குடும்பத்தில் இருப்பவர்களுடன் மிகவும் நெருக்கமாக, பாசமாக இருக்க முடிகிறது. அந்த வகுப்பிற்குப் பிறகு என் வாழ்க்கையே மாறிப் போனது. மிகுந்த வித்தியாசத்தை உணர்கிறேன். ஆனால் இப்படி, இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வகுப்பில் அவர்கள் சொல்வதேயில்லை. அதை நாமாகவே உணர்ந்து கொள்கிறோம்.
- பாத்திமா பாபு, செய்தி வாசிப்பாளர்
மேலும் படியுங்கள்…
எங்களது விளம்பரதாரர்கள்