அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள ஈஷா உள்நிலை விஞ்ஞான நிறுவனமானது, மேற்கு நாடுகளின் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுவதாக உள்ளது. உலகின் இந்தப் பகுதியில் இதுவரை அறியப்படாத, யோக அறிவியலின் அனைத்துப் பரிமாணங்களுக்குமான ஆதாரமாக, இந்த மையம் விளங்குகிறது. மிகவும் முக்கியமாக, இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கின்ற அதிநுட்பமான யோகியருள் ஒருவரின் வழிகாட்டுதலோடு, ஆன்மீகத் தேடலில் உள்ளவர்கள், தங்களின் தாகத்தை ஆழப்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கும் ஒரு புனிதமான இடமாக அது திகழும். அந்த வகையில், ஆயிரக்கணக்கான வருடங்களுக்கும் மேலாக இந்தியாவின் யோகியரால் வளர்த்தெடுக்கப்பட்ட ஆன்மீக வழிமுறைகளை, வட அமெரிக்காவில் வழங்குவதில், இந்த மையம் தனித்துவம் பெற்றதாக இருக்கும்.
ஈஷா உள்நிலை விஞ்ஞான நிறுவனம், தன்னுள்ளே 39,000 சதுர அடியில் 'மகிமா' (மகிமா என்றால் அருள்வெளி) என்னும் தூண்களற்ற தியான அரங்கைக் கொண்டுள்ளது. இந்த தியான அரங்கு, இந்த வகையிலான அரங்குகளில், மேற்கத்திய நாடுகளிலேயே மிக பெரியதாக இருக்கிறது. புதிதாக வடிவமைக்கப்பட்ட இம்மையத்தில், முதன் முறையாக அங்கேயே தங்கியிருந்து செய்யக்கூடிய மேல்நிலை வகுப்புகளை, தற்போது ஈஷா வழங்குகிறது.
முழுமையான வளர்ச்சி பெற்ற பிறகு, ஈஷா உள்நிலை விஞ்ஞான நிறுவனத்தில் மகிமா நிகழ்ச்சி வளாகம், ஈஷா கிராம குடியிருப்போர் சமூகம், ஓய்வு பெற்றவர்களின் சமூகம் மற்றும் ஈஷா புத்துணர்வு மையம் மற்றும் உள்நிலை வளர்ச்சிக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணிப்பவர்களுக்கான ஒரு வளாகம் ஆகியவை அடங்கியிருக்கும். ஈஷா புத்துணர்வு மையமானது, இயற்கை முறையிலான, பழமை வாய்ந்த சித்த, ஆயுர்வேத மற்றும் யோக முறைப்படி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகும்.