ஈஷா யோக மையத்தில், மஹா சிவராத்திரி விழா, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி/மார்ச் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த மஹாசிவராத்திரி நாளின் பகலுக்கும், இரவுக்கும் உள்ள சிறப்புத் தன்மையானது, இயற்கையின் சக்திகளை நமது நலனுக்கு உபயோகப்படுத்திக் கொள்ள ஒரு உன்னதமான வாய்ப்பை வழங்குகிறது. மேலும், யோகப் பரம்பரையில் இந்த இரவு, ஆதிகுருவாகக் கருதப்படும் சிவனின் அருளைக் கொண்டாடுவதாக அமைந்துள்ளது.

மஹா சிவராத்திரி நாளன்று, கோள்களின் குறிப்பிட்ட அமைப்பால், மனிதரின் கட்டமைப்பில் உள்ள சக்தியானது மேல்நோக்கி நகர்கிறது. எனவே அந்த நாளன்று விழிப்புடன், முதுகுத்தண்டை நேர்நிலையில் வைத்திருக்கும்போது, ஒரு மனிதனுக்குள் ஆன்ம எழுச்சி நிகழ, இயற்கையாகவே ஒரு சூழ்நிலை உருவாகிறது. மஹாசிவராத்திரி இரவு முழுவதும், விழிப்புடன் இருப்பது, ஒரு மனிதரின் உள்நிலையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்து அனைத்து நலன்களையும் கொடுக்கிறது. மேலும் அந்த இரவில், எந்த யோகப் பயிற்சி செய்தாலும், அதன் பலன் பன்மடங்கு பெருகும். இந்த காரணத்திற்காகத்தான் யாரும் அன்று இரவு உறங்கக் கூடாது என்று யோகப் பரம்பரையில் கூறுகிறார்கள்.

இத்தகைய அரிய வாய்ப்புகளைக் கொண்டிருப்பதால், ஈஷா யோக மையத்தில், மஹாசிவராத்திரி விழா மிகப்பெரிய கொண்டாட்டமாக, ஒரு இறை விழாவாக இரவு முழுவதும் நிகழ்கிறது. இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல், உலகெங்கும் இருந்து மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் பங்கேற்க ஈஷாவில் கூடி சத்குருவுடன் சத்சங்கத்தில் ஈடுபடுகிறார்கள்.

அடுத்த மஹாசிவராத்திரி 2011ம் ஆண்டு மாதம் ம் தேதி வருகிறது. ஈஷா வளாகத்தில் நடைபெறும் சிவராத்திரி விழா மாலை 6 மணிக்கு குருபூஜையுடன் துவங்குகிறது. உள்சூழ்நிலையில் மாற்றம் கொண்டு வரக்கூடிய சக்தி மிகுந்த அறிவை நமக்கு கொடுத்த பல குருமார்களுக்கு நன்றி சொல்லும் விதமாக, இந்த குரு பூஜையை சத்குரு நிகழ்த்துகிறார். இதைத் தொடர்ந்து சத்குரு அவர்களின் அருளுரை நிகழ்கிறது. இரவு முழுவதும் சத்குரு அவர்களால் பல சக்தி வாய்ந்த தியானங்கள் நடத்தப்படுகின்றன. இவற்றின் நடுவே பல வண்ணமயமான, உயிரோட்டத்துடன் கூடிய கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மஹாசிவராத்திரி விழாவில் உலகின் தலைசிறந்த இசை மேதைகள் பங்கேற்று தெய்வீக இன்னிசை நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள்.

• மஹாசிவராத்திரியன்று, உங்கள் வீட்டிலிருந்தபடியே நீங்கள் என்ன செய்யலாம்
• மஹாசிவராத்திரி, மந்திரத்தின் சக்தி. 
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • TwitThis
  • StumbleUpon
  • Technorati
  • Google
  • YahooMyWeb
 
ISHA FOUNDATION
Isha Foundation - A Non-profit Organization © Copyright 1997 - 2019. Isha Foundation. All rights reserved
Site MapFeedbackContact UsInternational Yoga DayMahashivratri 2019 Live Stream Copyright and Privacy Policy Terms and Conditions