ஈஷா திருநாள்

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தில், சத்குரு ஞானோதயம் அடைந்த நாள் உலக அமைதி தினமாகவும் ஈஷா திருவிழாவாகவும் கொண்டாடப்படுகின்றது.

உலகெங்கும் உள்ள வெவ்வேறு கலாச்சாரங்களை அறிந்து கொள்வதற்காக ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நாடு அல்லது இந்திய மாநிலத்தின் கலாச்சாரத்தையும் இந்த ஈஷா திருநாளில் கொண்டாடப்படுகிறது. அந்த குறிப்பிட்ட கலாச்சாரத்தின் பாடல், ஆடல், கலை மற்றும் உணவு இவை அந்த விழாவில் இடம் பெறுகின்றன. குறிப்பிட்ட கலாச்சாரத்தைச் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் இவ்விழாவை முன்னின்று நடத்துவர். ஆப்பிரிக்கா, கேரளா, ராஜஸ்தான், மஹாராஷ்ட்ரா போன்ற பகுதிகளின் கலாச்சாரங்கள் இதுவரை கொண்டாடப் பட்டிருக்கின்றன.

இந்த கலாச்சார நிகழ்ச்சிகளில் இந்தியா மற்றும உலகெங்குமிருந்து புகழ்பெற்ற கலைஞர்கள் பல பாரம்பரியம் மிக்க இசை, நடன நிகழ்ச்சிகளையும் மற்றும் நவீன ஆடல், பாடல்களையும் நிகழ்த்துவர். இங்குள்ள உணவுக் கூடங்களில் இந்தியா மற்றும் மேற்கத்திய உணவு வகைகள், சத்து பானங்கள் மற்றும் இனிப்புகள் விற்கப்படுகின்றன. கலை மற்றும் கைவினைப் பொருட்கள் பிரிவில் ஈஷா கைவினைப் பொருட்களான கைப்பைகள், ஆடைகள், கலைநயம் மிக்க பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் ஆகியவைகளை நாம் வாங்கி மகிழலாம்.

உலக அமைதிக்காக பல புகழ்பெற்ற இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சியும் உள்ளது. ஹரிபிரஸாத் சௌராசியா, ஷிவ்குமார் சர்மா, டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, சுதா ரகுநாதன், அனுராதா ஸ்ரீராம், உஷா உதுப், வாணி ஜெயராம், மனீஷ் வியாஸ் மற்றும் 'இந்தியன் ஓஷன்' போன்ற கலைஞர்கள் இவ்விழாவை சிறப்பித்துள்ளனர்.

 
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • TwitThis
  • StumbleUpon
  • Technorati
  • Google
  • YahooMyWeb
 
ISHA FOUNDATION
Isha Foundation - A Non-profit Organization © Copyright 1997 - 2019. Isha Foundation. All rights reserved
Site MapFeedbackContact UsInternational Yoga DayMahashivratri 2019 Live Stream Copyright and Privacy Policy Terms and Conditions