தொன்று தொட்டு, அனைத்துக் கலாச்சாரங்களிலும், கொண்டாட்டங்கள் என்பது மனித வாழ்வுடன் நுணுக்கமாக பிணைக்கப்பட்டுள்ளன. அடிப்படையில் இக்கொண்டாட்டங்கள் நமது அன்றாட வாழ்வின் சலிப்பிலிருந்து பெரிய விடுதலையளிக்கிறது. இன்னொரு வழியில், இது ஒரு மனிதரை அவரது விழிப்புணர்வின் உச்ச நிலைக்கு அழைத்துச் செல்கிறது. இந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள நன்றியுணர்வைத் தூண்டிவிட்டு, மேலும் ஆழமான வாய்ப்புகளைப் பெறுவதற்கு அழைத்துச் செல்கின்றன. இந்த கொண்டாட்டங்களில் உள்ள மகிழ்ச்சியும், ஆனந்தமும் பலரையும் கருணையுடனும், தாராளத்துடனும், மனித நேயத்துடனும் இருக்கச் செய்கின்றன. மேலும் இந்தக் கொண்டாட்டங்கள், மனிதர்களில் ஒருமை உணர்வை உண்டாக்கி, மன்னிக்கும் குணத்தையும், பிரிந்தவர்கள் கூடுவதையும் நிகழச் செய்கின்றன.
ஈஷாவில், இந்தக் கொண்டாட்டங்கள் சடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், தன்னை அறிவதற்கு ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கிறது.
சில கொண்டாட்டங்கள், உள்நிலை வளர்ச்சிக்கு உதவுவதால், அவை தேர்ந்தெடுக்கப்படுகின்றன. சில கொண்டாட்டங்கள் ஒருமை உணர்வை ஊக்குவிப்பதால், அவை தேர்ந்தெடுக்கப்படுகின்றன. சில கொண்டாட்டங்கள் மகான்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதாக அமைந்திருக்கிறது. இம்மகான்கள் உச்சக்கட்ட விழிப்புணர்வில் வாழ்ந்ததுடன் அல்லாமல், மற்றவர்களையும் வழிநடத்திச் சென்றனர். ஒட்டுமொத்தமாக, இந்த விழாக்கள் எல்லாம் நம் முன்னோர் நமக்கு இந்த வாய்ப்புகள் கிடைக்கச் செய்தமைக்காக நாம் வெளிப்படுத்தும் நன்றியுணர்வுதான்.
இந்த கொண்டாட்டங்களில் பங்கு பெற உங்களை அழைக்கிறோம். இந்த சமூக, கலாச்சாரங்கள் சேர்ந்துள்ள வண்ணமயமான கொண்டாட்டங்களில் பங்குபெற்று, வாழ்வின் பேரின்ப நிலையில் திளையுங்கள்.