புத்த பூர்ணிமா
கௌதம புத்தர் பிறந்து 2,500 வருடங்கள் கடந்தும் ஞானோதயம் அடைந்த அவரின் போதனைகள் ஆன்ம சாதகர்களை இன்றும் வழி நடத்துகிறது. புத்த பூர்ணிமா வைசாக மாதத்தில் (ஏப்ரல் அல்லது மே) கொண்டாடப்படுகிறது. இந்நாள், கௌதம புத்தரின் பிறப்பு, ஞானோதயம், மற்றும் மஹா சமாதி ஆகிய நாட்களை நமக்கு நினைவு படுத்துவதோடு மட்டுமல்லாமல் நாமும் அந்த மாதிரி நிலையை அடையலாம் என்று நமக்கு உணர்த்துகிறது.
ஈஷா யோக மையத்தில் புத்த பூர்ணிமா அன்று புனிதமான புத்தமதத்தின் உச்சாடனங்களும், தியானலிங்கத்திற்கு சிறப்பு அர்ப்பணிப்புகளும் நடைபெறுகின்றன. மேலும் மாலை மற்றும் பௌர்ணமி தியானங்களும் நடைபெறுகிறது. அன்றைய இரவின் அதிர்வுகள் ஒருவருடைய உள்நிலை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.
சத்குரு எங்கிருந்தாலும், அன்று அவருடைய சத்சங்கம் மற்றும் தியானங்களை ஈஷா தியான அன்பர்கள் மிகவும் ஆவலோடு எதிர்நோக்குவார்கள்.