“ஒன்றை நான் உறுதியாக உங்களுக்குச் சொல்ல முடியும். இந்தப் பாதையில் பயணிக்கும்போது, வாழ்க்கையின் சுகங்களை நீங்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மனநிறைவு அடையமுடியும். உங்கள் வாழ்க்கையில், நீங்கள் செய்யக்கூடிய மிகவும் மனநிறைவான செயல்களில் ஒன்றாக இது இருக்கும்.” - சத்குரு
ஆசிரியர் பயிற்சி
ஈஷா யோகாவின் சாத்தியங்களை உலகிற்கு அளிக்க, சத்குருவால் வடிவமைக்கப்பட்ட ஈஷா யோகா ஆசிரியர் பயிற்சி, ஒரு வாய்ப்பாக இருக்கிறது. இந்தத் தீவிரப் பயிற்சியானது, ஈஷா யோகாவின் ஆழமான பரிமாணங்களை கண்டறிவதற்குத் தேவையான சூழ்நிலைகளை ஒருவருக்கு உருவாக்கித் தருகிறது. மேலும், மக்கள் உள்நிலை மாற்றம் காண்பதற்குத் தேவையான கருவிகள் பெற, ஈஷா யோகா ஆசிரியர்கள் தக்க வாகனங்களாகத் திகழ்கிறார்கள்.
உள்நிலை மாற்றம் காணும் பயணத்தில் தாங்கள் அடைந்த அனுபவங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள விழைந்த இவர்களின் பேராவலே, இவர்களை இந்தப்பாதையில் தங்களை அர்ப்பணிக்கத் தூண்டியுள்ளது. தற்போது, நாடு, வயது, குடும்பப் பின்னணி போன்ற எல்லைகளைத் தாண்டி பல வயதிலும் உள்ள தியான அன்பர்கள், இந்த சாத்தியத்தை மற்றவர்களுக்கு அளிப்பதற்காக தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள்.
ஆசிரியப் பயிற்சியானது, ஈஷா யோக மையத்தில், இடைவெளியின்றி தொடர்ந்து நடந்துவருகிறது. தங்கள் சொந்த சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முழுநேர ஆசிரியப் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் தொடர்ந்து யோக மையத்தில் தங்க முடியாதவர்கள் வீட்டிலிருந்தபடியே தங்கள் பயிற்சியைத் தொடரலாம்.
ஆசிரியப் பயிற்சி எடுத்து முழுநேரமாக ஆசிரியராக சேவை செய்ய விரும்பினாலும் சரி, அல்லது பகுதி ஆசிரியராக இருந்து ஒரு வாரத்தில் சில மணித்துளிகள் மட்டும் பயிற்சியளிக்க விரும்பினாலும் சரி, அவரவர்களுக்கு ஏற்றபடி பல வாய்ப்புகள் உள்ளன.
- அறிமுகம் மற்றும் உயர்நிலை ஈஷாயோக நிகழ்ச்சிகளை குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் போதித்தல்
- ஈஷா யோகா பற்றிய அறிமுக உரைகளை பொது இடங்களில் வழங்குதல்
- மாதாந்திர சத்சங்கங்கள் நடத்துதல்
- ஈஷா யோகா வகுப்புகளை பல இடங்களுக்கும் எடுத்துச்செல்ல பணி செய்தல்
- யோக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் அவற்றில் தன்னார்வத் தொண்டு செய்தல்
- ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாகம்
மேலும் தகவல்களுக்கு: மின்னஞ்சல்:
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்