"எவ்வகையிலும் பாதிக்கப்படாமல் நீங்கள் வாழ்க்கையை வாழமுடியும். எந்த வழியில் வேண்டுமானாலும் நீங்கள் வாழ்க்கையுடன் விளையாட முடியும், இருப்பினும் வாழ்க்கை எந்த பாதிப்பையும் உங்களுக்கு நிகழ்த்தாது, வாழ்க்கை உங்கள் மேல் எந்த தழும்பையும் விட்டுச் செல்லாது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இந்த அதிசயத்தை நிகழ்த்தத்தான் நாம் பணிபுரிந்து வருகிறோம்."- சத்குரு
சன்யாசம்
யோக மார்க்கமான துறவறத்தில், முழு உறுதியாக இருக்கும், சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் சிஷ்யர்கள், பிரம்மச்சரிய தீட்சை பெற்றுக் கொள்ளலாம். பிரம்மன் என்றால் தெய்வீகம், சார்யா என்றால் பாதை. தெய்வீகப் பாதையில் நடப்பவர்கள்தான் பிரம்மச்சாரிகள். இந்த பாதையில் செல்பவர்கள் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் சன்யாசி ஆக தீட்சை பெறுவதற்கு 7 முதல் 10 வருடங்கள் காலக்கெடு கொடுக்கப்படுகிறது. கட்டுப்பாடு, சுதந்திரம், அர்ப்பணிப்புணர்வு ஆகிய எல்லாம் சேர்ந்து ஒரு அழகான கலவையாக இவர்கள் தினசரி ஆன்மீக பயிற்சிகளுடன் ஈஷா யோக மையத்தின் பல்வேறு இயக்கங்களிலும் ஈடுபடுகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட நல்ல கல்வியறிவும், திறமையுமுடைய இந்த இளைஞர்களும், பெண்களும் ஈஷா யோக மையத்தில் வேலை பார்த்தும், வாழ்ந்தும் வருகிறார்கள். இவர்கள் உள்நிலையில் ஆனந்தத்துடனும், நிறைவுடனும் தெய்வீகப் பாதையில் நடமாடுகிறார்கள்.