"சத்சங்கம் என்பது கோபம், வெறுப்பு, பொறாமை, பிடிக்கும், பிடிக்காது போன்ற அனைத்து இருமை நிலைகளுக்கும் அப்பால் செல்வது - ஞானத்தின் ஒளியில் மூழ்கி எழுவது" -சத்குரு
மகாசத்சங்கம்
சத்சங்கம் என்றால் உண்மையுடன் உடனிருத்தல் என்று பொருள். அதிக மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக, சத்குரு அவர்கள், இந்தியா மற்றும் அமெரிக்காவில் நடக்கும் மகா சத்சங்கங்களில், பொதுமக்களுக்கு தன் அறிவையும் அருளையும் வழங்குகிறார். இந்த இலவச பொது நிகழ்ச்சிகள், உள் அமைதி மற்றும் நலனுக்கான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் மேடையாக இருப்பதால் மக்கள் தங்கள் இயல்பான நிலைக்கு திரும்பக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. நிகழ்ச்சியில் நடக்கக்கூடிய சக்தி வாய்ந்த இசை மற்றும் சத்குருவுடனான தியானங்கள், பங்கேற்பாளர்கள் உயர் அளவிலான விழிப்புணர்வை பெறக்கூடிய சூழநிலையை உருவாக்குகிறது. ஈஷா அறக்கட்டளையின் மகா சத்சங்கங்களால், உலகெங்கும் உள்ள மக்கள், உணர்வு, சிந்தனை மற்றும் வாழ்வு ஆகியவற்றில் புதிய பரிமாணத்தை உணர சத்குரு உதவுகிறார்.
அருளின் கொடை: சென்னையில் மகா சத்சங்கம்