ஈஷா புத்துணர்வு மையம்

"ஒவ்வொரு மனிதரும்ஆரோக்கியம் மற்றும் வளமான வாழ்வையே விரும்புகிறார். உள்நிலையிலும், வெளிப்புறத்திலும் இயற்கையோடு இயைந்திருப்பதே உண்மையான ஆரோக்கியத்தின் அடிப்படையான விளக்கம்." - சத்குரு

 
ஆயுர் ரசாயனா (2.5 நாட்கள்) &
ஆயுர் ரசாயனா இன்டென்சிவ் (5 நாட்கள்)

ஆயுர் என்றால் ஆயுள், ரசாயனா என்றால் முதுமை மற்றும் நோய்களை இல்லாதொழிப்பது. உங்கள் உடல், மனம் மற்றும் சக்திநிலை ஆகிய முழு கட்டமைப்புக்கும் தேவையான அமைதி, புத்துயிர் மற்றும் வலிமை ஆகியற்றைப் பெற ஆயுர் ரசாயனா ஒரு வாய்ப்பாக இருக்கிறது. சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, தற்கால சிகிச்சை முறைகளையும், பண்டைய விஞ்ஞானத்தின் மேம்பட்ட அறிவையும் ஒருங்கிணைத்து, உங்கள் உயிர்சக்தி, புத்துணர்வு பெறுவதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஆயுர் ரசாயனா நிகழ்ச்சியில், புத்துணர்ச்சி தரும் மசாஜ், இறுக்கம் தளரச் செய்யும் மண் குளியல் மற்றும் முகத்திற்கான மென்மையான மசாஜ், மற்றும் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் அமைதியான நடைப்பயிற்சி ஆகியவை அளிக்கப்படுகின்றன. வாழ்க்கையை வளப்படுத்தும் யோகப் பயிற்சிகளும், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உணவு முறையும், தினசரி அளிக்கப்படும் மூலிகை மருந்துகளும், நிகழ்ச்சியில் பங்கேற்பவர்க்கு, உயர்ந்த, புத்துணர்வான அனுபவங்களை ஏற்படுத்துகிறது. பங்கேற்பாளர்கள் நிகழ்ச்சியில் இறுதியில், உயிரோட்டமுடனும், உடல் மற்றும் மனதின் புத்துணர்வு பெற்ற இணக்கத்துடனும் வெளி வருகின்றனர்.

நடக்க இருக்கும் ஆயுர் ரசாயனா நிகழ்ச்சிகள்
நடக்க இருக்கும் ஆயுர் ரசாயனா இன்டென்சிவ் நிகழ்ச்சிகள்
ஆயுர் ரசாயனா பகிர்வுகள்

 
ஆயுர் சம்பூர்ணா (7 நாட்கள்)

ஆயுர் சம்பூர்ணா என்பது, ஆயுர் ரசாயனா நிகழ்ச்சியில் வழங்கப்படும் அனைத்து அம்சங்களோடு ஆயுர்வேத சிகிச்சை முறைகளான ஷிரோதரா (நெற்றியில் மருத்துவக் குணமுள்ள என்ணெய் ஊற்றப்படுவது) உத்வர்தானம் (அதிக உடல் பருமனுக்கான பவுடர் மசாஜ்) பாதப்யங்கா (பாதங்களுக்கான மருத்துவ மசாஜ்), வாசனைத் திரவியங்களைக் கொண்ட மசாஜ்கள், மற்றும் பலவிதமான குளியல்கள் (மண், வாழையிலை, நீராவி) போன்றவைகளையும் உள்ளடக்கியது. உடல், மனம் மற்றும் உணர்ச்சிகளின் தடைகளை நீக்கத் தூண்டும் யோகாசனங்களும் கற்றுத் தரப்படுகின்றன.

நடக்க இருக்கும் ஆயுர் சம்பூர்ணா நிகழ்ச்சிகள்
ஆயுர் சம்பூர்ணா பகிர்வுகள்

 
யோக மார்கா (21 நாட்கள்)

மூன்று வாரகால சிகிச்சை வழிமுறைகளின் மூலம் உங்களுடைய உடலுக்குப் புத்துணர்வையும், நவீன வாழ்க்கை முறைகளின் விளைவான மன இறுக்கத்தில் காணாமல் போன உயிரோட்டத்தையும் உங்களிடம் மீண்டும் புதுப்பித்து நிலைநிறுத்துகிறது. மனித உடல் மற்றும் மனம் இவற்றைப் பற்றி சத்குருவின் ஆழமான புரிதல்தான் இந்த சிகிச்சை முறைகளின் சாராம்சமாக உள்ளது. ஒவ்வொரு தனி நபருக்கும், அர்ப்பணிப்புள்ள சிறப்பு மருத்துவக்குழு ஒன்று விரிவான சிகிச்சை முறையை ஆய்வு செய்து பரிந்துரைக்கிறது. யோகப் பயிற்சிகள், தியானம், உணவு முறை, சித்த மருத்துவம் மற்றும் சிகிச்சைகள் (தேவைப்பட்டால்) இவற்றுள் அடங்கும். மேலும் உயர்நிலையிலான சக்தி அதிர்வுகளைக் கொண்ட ஈஷா யோக மையம் மற்றும் புனிதமான தியானலிங்க யோகத் திருக்கோயிலில் இருப்பதும் தீர்த்தக்குளம் குளியலும் உங்களிடம் மறுக்கவியலாத முன்னேற்றத்தை நிகழ்த்தும்.

நடக்க இருக்கும் யோக மார்கா நிகழ்ச்சிகள்

 
சுநேத்ரா கண் சிகிச்சைமுறை (5 நாட்கள்)

'சு' என்றால் 'நல்ல' என்றும் நேத்ரா என்றால் 'கண்கள்' என்றும் பொருள். இந்த நிகழ்ச்சி மையோஃபியா(கிட்டப்பார்வை) மற்றும் ஹைபெரோபியா(தூரப்பார்வை) ஆகிய கண் பிரச்சனைகளைக் கையாளுவதற்கென்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

யோகப்பயிற்சிகள், கண் பயிற்சிகள், பிரத்தியேக உணவு முறை மற்றும் பலவிதமான கண் சிகிச்சைகள் இந்த 5 நாள் நிகழ்ச்சியில் வழங்கப்படுகின்றன.

சுநேத்ரா நிகழ்ச்சியின்போது, அனைத்து புத்துணர்வு நிகழ்ச்சிகளிலும் அளிக்கப்படுகிற வன நடைப்பயிற்சியும் மற்றும் தனித்தன்மையான மசாஜ்முறைகளும் வழங்கப்படுகிறது.

வரக்கூடிய சுநேத்ரா நிகழ்ச்சிகளின் விபரம்
 
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • TwitThis
  • StumbleUpon
  • Technorati
  • Google
  • YahooMyWeb
 
ISHA FOUNDATION
Isha Foundation - A Non-profit Organization © Copyright 1997 - 2022. Isha Foundation. All rights reserved
Site MapFeedbackContact UsInternational Yoga DayGuru Purnima 2019 Privacy Policy Terms and Conditions