உள்நிலை மாற்றம்
இந்த எல்லையற்ற நிலையை அடைய, யோகா, மனிதரில் உள்நிலை மாற்றம் ஏற்படுத்தி, விடுதலையைத் தருகிறது.


ஒரு கம்பளிப்பூச்சி பற்றிய அழகான கதை ஒன்று உள்ளது. மற்ற கம்பளிப்பூச்சிகளைப் போலவே உண்ணவும் உறங்கவும் மட்டுமே தான் உதித்ததாக அது எண்ணிக் கொண்டிருந்தது. ஆனாலும் அது மகிழ்ச்சியின்றி இருந்தது. தன் வாழ்க்கையில், இன்னமும் தான் உணராத ஒரு பரிமாணம் இருப்பதை அது எப்படியோ பிறகு உணர்ந்து கொண்டது.

ஒரு நாள், ஒரு விநோதமான ஏக்கத்தில், அசைவற்றும் அமைதியாகவும் இருக்க அது முடிவெடுத்தது. ஒரு மரத்தின் கிளையில் தொங்கிய அது, தன்னைச்சுற்றி ஒரு கூட்டை கட்டிக் கொண்டது. வசதியின்றி இருந்தபோதும், அந்தக்கூட்டுக்குள், விழிப்புணர்வுடன் காத்திருந்தது. அதனுடைய பொறுமை கடைசியில் பலன் கொடுத்தது. ஒரு நாள் அந்தக் கூடு வெடித்து அழகான, கண்ணைப் பறிக்கும், இறக்கைகளுடன் வெளிவந்து வானத்தை வட்டமிட்டது. இப்போது அது வெறுமனே புழுவாக இருப்பதிலிருந்து விடுதலை அடைந்து சுதந்திரமாகவும் எல்லையற்றதாகவும், அழகானதாகவும் ஆகி விட்டது.

ஒரு முறை மாற்றம் நிகழ்ந்தபிறகு, அந்த வண்ணத்துப்பூச்சி, மீண்டும் புழுவாக மாறவே முடியாது. அது, கூட்டுக்குள் இருந்தபோது, தன் உள்நிலையுடன் ஒன்றிணைந்து இருந்தது. அதுவே, அது, தன் இறுதி இயல்பை அடையக் காரணமாக இருந்தது. அந்தக் கூட்டுக்குள் அதற்கு என்ன நிகழ்ந்ததோ அதை யோகாவாக சித்தரிக்க முடியும். எல்லையற்றதாக மாற, எப்போதும், யோகா ஒரு வழியாக இருக்கிறது.

யோகா மனிதர்களில் மாற்றம் நிகழ்த்தி, விடுதலையைத் தந்து, அவர்கள் எல்லையற்ற நிலையை அடையச் செய்கிறது. மனிதர்கள், மிருகங்கள் போல் வெறுமனே உண்டு உறங்க வரவில்லை. அவர்கள் மாற்றத்திற்கு உட்பட்டவர்கள். தான் கட்டுக்குள் இருப்பதை அறிந்து, தீவிரமான ஆவலுடன் உள்நிலை மாற்றத்திற்கு முயற்சித்தால் மட்டுமே ஒவ்வொருவரும், தன் இயல்புநிலையான மனிதராக பரிணமிக்க முடியும். இதற்கான திறமை நம் எல்லோரிடமும் இருக்கிறது.

யோகா என்றால் என்ன?
 
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • TwitThis
  • StumbleUpon
  • Technorati
  • Google
  • YahooMyWeb
 
ISHA FOUNDATION
Isha Foundation - A Non-profit Organization © Copyright 1997 - 2013. Isha Foundation. All rights reserved
Site MapFeedbackContact Us View our Copyright and Privacy Policy