வனஸ்ரீ சுற்றுச்சூழல் மையம்
ஈஷா அறக்கட்டளையின் வனஸ்ரீ சுற்றுச்சூழல் மையம் என்பது, கோவை அருகிலுள்ள வெள்ளியங்கிரி மலைகளின் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கவும், மற்றும் வெள்ளியங்கிரி மலைகளில் வசிக்கும் பல்லுயிர்களின் வளங்களைக் காப்பாற்றவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மலைகளின் அடிவாரத்தில்தான் ஈஷா யோக மையம் அமையப் பெற்றிருக்கிறது.
சர்வதேச மலைகள் ஆண்டான 2002ம் ஆண்டில், வெள்ளியங்கிரி மலைகளைப் பாதுகாப்பதற்கான பிரச்சாரம் மற்றும் செயலாக்கம் ஆகியவற்றை, இந்த சுற்றுச்சூழல் மையம் துவக்கியது. வனங்களையும் உயிரினங்களையும் பாதுகாக்கும் இதன் செயல் தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் இது தொடர்பான கல்வியையும் நேரடி அனுபவங்களையும் இளைஞர்களுக்கு வழங்குகிறது.
வனப்பரப்பின் வளமான சுற்றுச்சூழல் ஆதாரங்களைக் காக்கவும், மற்றும் அதிகரிக்கவும் செய்வதற்கான முயற்சியில், வனஸ்ரீ உயிரியல் மையம், பெருமளவிலான மரம் நடும் திட்டங்களையும், மலைகளைத் துப்புரவு செய்யும் பணியிலும் ஈடுபடுகிறது. மேலும் வனவிலங்குகளை வேட்டையாடுவதை தவிர்க்க உதவுவதோடு, இத்ந மலைகளுக்கே உரிய உயிரினங்களைப் பெருக்குவதன் வாயிலாக, மலைகளுடைய மரபுப்பண்பு பாதுகாக்க உதவுகிறது.
சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஊட்டுவதற்கு உதவும் விதமாக, ஒவ்வொரு கோடையிலும், பள்ளிக் குழந்தைகளுக்கு, இயற்கைக் கல்வித் திட்டங்கள் வகுப்புகளாக வழங்கப்படுகின்றன. பள்ளிகளின் வழக்கமான கல்விப் பாடத்திட்டத்தில் வராத அம்சங்களாகிய இயற்கைக் கல்வி மற்றும் இயற்கைப் பாதுகாப்பு பற்றியவை அந்நிகழ்வுகளில் இடம் பெறுகிறது.