flood relief

வெள்ள நிவாரணம்

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் 2005, நவம்பர் 18-லிருந்து 2005, நவம்பர் 24-ம் தேதி வரை பொழிந்த வடகிழக்குப் பருவமழை, பெரும் நாசங்களை ஏற்படுத்தியதுடன், நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கியும், வீடுகள் மற்றும் கட்டங்களுக்கு பெரும் சேதத்தினையும் உண்டாக்கிவிட்டது. 5,00,000க்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து பாதுகாப்பு கருதி வெளியேறிவிட நேர்ந்தது.

ஈஷா அறக்கட்டளை உடனடி செயலில் ஈடுபட்டு முழுமையான வசதிகளுடனான 6 நடமாடும் மருத்துவமனைகளுடன் flood relief 45 ஈஷா மருத்துவர்கள் மற்றும் 350 ஈஷா தன்னார்வத் தொண்டர்களையும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி நவம்பர் 20 முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை முகாமிட்டிருந்தது. அறக்கட்டளையின் கிராமப்புத்துணர்வு இயக்கத்தைச் சார்ந்த மருத்துவக் குழுக்கள், தக்க வாகனங்களுடன் கடலூர், சிதம்பரம் மற்றும் திருச்சியின் 87 பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நிவாரணம் வழங்கியது. நடமாடும் மருத்துவமனை சேவைகளின் வாயிலாக, 45 மருத்துவர்கள் திருச்சி, கி.ஆ.பெ.விஸ்வநாதன் மருத்துவ கல்லூரியுடன் இணைந்து 37,253 பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கினர். ஆயிரக்கணக்கான உணவுப் பொட்டலங்களுடன், குடிநீர் மற்றும் சமைக்கப்பட்ட உணவும் விநியோகிப்பட்டது. படுக்கை விரிப்புகள், பாய்கள் மற்றும் பள்ளிச் சீருடைகளும் பாதிக்கப்பட்டோருக்கு அளித்ததோடு, ஒருநாளில் இரண்டு முறை 1000 குழந்தைகளுக்கு பால் பரிமாறப்பட்டு, அவர்களுக்கு சத்தான ஆகாரம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.

மழையின் தாக்குதலுக்கு இலக்கான இடங்களை கணக்கெடுப்பு செய்து, எந்த நிவாரண உதவியும் கிட்டாமல் தனிமைப்படுத்தப்பட்டு துண்டிக்கப்பட்ட கிராமங்களை ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் அடையாளம் கண்டனர். அறக்கட்டளையின் மருத்துவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நடத்தி, சுத்தமான நீர், ஆகாரம் இல்லாதநிலையில், வெள்ளநீரை உபயோகிப்பதனால் ஏற்படக்கூடிய சுகாதாரக்கேடு விளைவிக்கின்ற ஆபத்துக்களை எடுத்துரைத்தனர். கிராமங்களில் அறக்கட்டளையின் அர்ப்பணிப்பான, திறமையான செயல்பாடுகளைக் கண்ட அநேக சுகாதார வல்லுநர்களும், கல்லூரி மாணவ மாணவியரும், உள்ளூர் பொதுமக்களும், ஈஷா தன்னார்வத் தொண்டர்களும் தாமாகவே முன்வந்து இணைந்து உதவி, ஓய்வின்றி, ஒருநாளைக்கு 12-13 மணி நேரங்கள் பணிபுரிந்தனர்.

சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்கள் மன அதிர்ச்சியிலிருந்து மீள வடிவமைக்கப்பட்ட ஈஷா யோக வகுப்புகள், இந்த கிராம மக்களுக்கும் வழங்கப்பட்டது.இது, ஆழமான அதிர்ச்சியிலும் கைவிடப்பட்ட உணர்விலும் இருந்தவர்களை மறு நிர்மாணம் செய்து, அவர்களின் மனநலம் பழைய நிலைக்குத் திரும்பி சகஜ வாழ்க்கை வாழ பேருதவி புரிந்தது.

Free Medical Treatmentfree medical treatmentFlood ReliefFlood Relief
 
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • TwitThis
  • StumbleUpon
  • Technorati
  • Google
  • YahooMyWeb
 
ISHA FOUNDATION
Isha Foundation - A Non-profit Organization © Copyright 1997 - 2021. Isha Foundation. All rights reserved
Site MapFeedbackContact UsInternational Yoga DayGuru Purnima 2019 Copyright and Privacy Policy Terms and Conditions