மஹாசிவராத்திரி
ஈஷா யோக மையத்தில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி/மார்ச் மாதத்தில் மஹாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. மஹாசிவராத்திரியின் பகல் மற்றும் இரவுப்பொழுதின் விசேஷத் தன்மையானது இயற்கை சக்திகளை நம்முடைய நலனுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு ஒப்பற்ற வாய்ப்பினை வழங்குகிறது. மேலும் யோக மரபில் இந்த இரவு, சிவனின் அருளைக் கொண்டாடுவதாக இருக்கிறது. யோகப் பாரம்பரியத்தின் துவக்கமாக விளங்கும் சிவன், ஆதிகுருவாகக் (முதல் குரு) கருதப்படுகிறார்.
மஹா சிவராத்திரி இரவன்று நிலவும் கோள்களின் நிலைப்பாட்டால் மனித அமைப்பின் சக்தி நிலையில் இயற்கையாகவே ஆற்றல் மேல் நோக்கி எழும்புகிறது. ஒரு மனிதர் அன்றைய இரவு முழுவதும் விழிப்புணர்வான நிலையில் முகுதுத்தண்டை நேராக இருத்தி கண் விழித்திருப்பாரேயானால், ஒருவர் முழுமையான நலனை பெறுவதற்குரிய வகையில், உடல் ரீதியான பலனையும், உள்நிலை மாற்றத்தையும் வழங்குகிறது. அது மட்டுமின்றி இந்த இரவில் மேற்கொள்ளப்படும் எந்த யோகப் பயிற்சியின் பலனும் பன்மடங்காக அதிகரிக்கிறது. இந்தக் காரணத்தினால்தான் யோகப் பாரம்பரியத்தில் மஹாசிவராத்திரி இரவில் தூங்கக்கூடாது என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் மஹாசிவராத்திரி மிகுந்த கோலாகலத்துடனும், எழுச்சியுடனும் ஈஷா யோகாவில் கொண்டாடப்படுகிறது. நிகரில்லாத இந்த இரவு முழுவதும் நடைபெறும் நிகழ்வுகளிலும், சத்குருவுடனான சத்சங்கத்தில் பங்கேற்கவும், இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மற்றும் உலக நாடுகளிலிருந்தும் 3,00,000-க்கும் அதிகமானோர் வருகின்றனர்.
அடுத்த மஹாசிவராத்திரி மார்ச் 2, 2011 புதன்கிழமை அன்று நிகழவிருக்கிறது. உள்நிலை மாற்றத்திற்கான உச்சபட்ச அறிவை ஒருவர் எய்துவதற்கான முயற்சிகளுக்குக் காரணமான மகத்துவமிக்க குருமார்களுக்கு வணக்கங்களைச் செலுத்தும் குருபூஜையை சத்குரு நிகழ்த்துவதுடன் சிவராத்திரி கொண்டாட்டங்கள் மாலை 6.00 மணிக்குத் துவங்குகின்றது. இதனைத் தொடர்வது சத்குருவின் பிரசங்கம், இடையிடையே புத்துணர்வூட்டும் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளோடு, சக்தி வாய்ந்த தியானங்கள் சத்குருவினால் நடத்தப்படுகின்றன. உலகப் புகழ்பெற்ற சாஸ்த்ரீய மற்றும் நவீன இசைக்கலைஞர்களால் கண்ணுக்கும், காதுக்கும் விருந்தான கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
What you can do on Mahashivarathri at your home
Mahashivarathri, the Power of the Mantra