Women's Empowerment

மகளிர் மேம்பாடு

கிராமப்புறப் பெண்களுக்கான சமூக நியாயம் மற்றும் ஆண்களுக்கு இணையான சமன்பாட்டினை உருவாக்க வேண்டுமென்பது, ஈஷா அறக்கட்டளையின் சமூக நலத் திட்டங்களின் அடிப்படைக் குறிக்கோள்களுள் ஒன்றாக இருக்கிறது. இதனை நடைமுறைப்படுத்தும் விதமாக, சமூக-பொருளாதார ரீதியான முன்னேற்றத்தினை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும், விழிப்புணர்வு மற்றும் சுயச்சார்பினை அதிகரிக்கும் வழிமுறைகளும், இத்திட்ட செயலாக்கத்தின் அனைத்து மட்டங்களிலும், முறையாக அமல்படுத்தப்படுகிறது.

Women's Empowermentகல்வி மற்றும் பயிற்சி: ஈஷா அறக்கட்டளையானது, குறிப்பாக, கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண்குழந்தைகள், மற்றும் இளம் பெண்கள் ஆகியோரின் மேம்பாட்டிற்காக உலகத்தரத்திற்கு நிகரான கல்வி (ஈஷா வித்யா), தொழில் பயிற்சி (ஈஷா கைவினைப் பொருட்கள்) , கணிணிக் கல்வி (கிராமப்புற கணிணி மையங்கள்), அறிவுசார்ந்த பயிற்சிகள் (விழிப்புணர்வுக் கல்வி மற்றும் மூலிகைத் தோட்டங்கள்), தகவல் பரிமாறுதலுக்கான வாய்ப்பு மற்றும் அது தொடர்பான வலைத்தளம், மேலும் ஆளுமை வளர்ச்சியுடன் இணைந்த தனிப்பட்ட முறையிலான முன்னேற்றம் ஆகியவை தொடர்பான இலவச கல்வி முகாம்களை நிகழ்த்துகிறது.

சுகாதாரப் பணி: அறக்கட்டளையின் சார்பில் இயங்கும் நடமாடும் மருத்துவமனை, நவீன ஆரம்ப சுகாதார மருத்துவ சாதனங்களைக் கொண்டு செயல்படுவதால், கிராம சமுதாயத்தின், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வினை பெருமளவு மேம்படுத்துகிறது. மேலும் ஈஷா அறக்கட்டளையின் சமீபத்திய எய்ட்ஸ் விழிப்புணர்வுத் திட்டத்தோடு இணைந்த எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகளினால், பாதிக்கக்கூடிய வட்டங்களுக்குள்ளிருக்கும் பெண்களும், பதின் பருவப்பெண்களும் பெருமளவு பயனடைந்துள்ளனர்.

பொருளாதார மேம்பாடு: ஈஷா கைவினை , ஈஷா வர்த்தகம் ஆகியவை பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட கிராமப் புறப் பெண்களுக்கு தொழில்முறைக் கல்வி வழங்குவதனால், அவாக்ளின் இயல்பான தனித்துவம் வாய்ந்த படைப்புத்திறன் அழிந்துவிடாமல் ஊட்டி வளர்க்கப்படுகிறது மற்றும் அவர்கள் பொருளாதார சுதந்திரத்தை அடைய வகை செய்கிறது. மேலும் கிராமப்புற இந்தியாவின் வளமான பாரம்பரியம் பாதுகாக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல்: ஈஷா அறக்கட்டளையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாடுகளில் இளம் பெண்கள் மற்றும் மகளிருக்கு முக்கியப் பங்கு அளிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கான பதில் நடவடிக்கைகளில், அவர்களை முழு வீச்சில் ஈடுபடச் செய்கிறது. எனவே, நம் பூமியின் வளங்கள் பாதுகாக்கப்படுவதில் அவர்களுக்கிருக்கும் முக்கியப் பங்கைக் குறித்த விழிப்புணர்வினை உண்டாக்குவதில் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளது.

சமூக நலம்: தனித்தன்மையோடு வடிவமைக்கப்பட்ட ஈஷா யோகா வகுப்புகள், சமுதாய விளையாட்டுக்கள், பயிற்சியளித்தல் மற்றும் கிராமங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் போன்றவைகள் அந்த மக்களின் நலிந்த உணர்வுக்குப் புத்துயிரூட்டுவதோடு கிராமப்புறப் பெண்கள் ஒதுக்கி வைக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வந்ததால் நிலவிய சமூகக் களங்கங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்து காணப்படுகிறது. இத்தகைய எளிமையானதும், ஆனால் சக்தி வாய்ந்ததுமான ஏற்றமிகு செயல்பாடுகள் பெண்களிடையே தன்னம்பிக்கையை நிலைநாட்டியுள்ளதுடன், அவர்களுடைய உற்சாகம், மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் சமூதாய உறவு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

Women's Empowerment Outreach Programs Social Service Programs Women's Empowerment Outreach Programs
Women's Empowerment
 
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • TwitThis
  • StumbleUpon
  • Technorati
  • Google
  • YahooMyWeb
 
ISHA FOUNDATION
Isha Foundation - A Non-profit Organization © Copyright 1997 - 2021. Isha Foundation. All rights reserved
Site MapFeedbackContact UsInternational Yoga DayGuru Purnima 2019 Copyright and Privacy Policy Terms and Conditions