சிறைச்சாலையில் ஈஷா வகுப்புகள்
அனைத்து படைப்புகளுடனும் தனக்கு உள்ள தொடர்பினை ஒருவர் உணராதவரை, ஒவ்வொரு மனிதரும் தனக்குத்தானே உருவாக்கிக் கொண்ட சிறையில் இருக்கிறார். விடுதலையாகும் விருப்பத்தில் சிறையை உடைத்தெறிய காத்திருக்கிறார்.
கோவை மத்திய சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை பெற்றவர்களுக்கான ஒரு ஆரம்ப நிகழ்ச்சிக்குப் பிறகு, ஐ.ஜி(சிறைச்சாலை) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, தமிழகத்தின் பல மத்தியச் சிறைச்சாலைகளில், ஈஷா அறக்கட்டளை தன் நிகழ்ச்சிகளை நடத்தத் துவங்கியது.
இந்தியாவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளின் வெற்றியைத் தொடர்ந்து, 'சிறைப்பட்டவர்களுக்கான உள்நிலை விடுதலை' என்று பெயரிடப்பட்ட நிகழ்ச்சிகளை சத்குரு அவர்கள் அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மற்றும் கென்டகி போன்ற சில சிறைச்சாலைகளில் அறிமுகம் செய்தார்.
அதன் விளைவாக, சிறைவாசிகள் நடந்து கொள்ளும் முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கவனிக்க முடிவதாக சிறை நிர்வாகிகளும், சிறைவாசிகளின் குடும்பங்களும் தெரிவித்துள்ளதுடன், அவர்களுடைய ஒழுக்கமும் பெருமளவு முன்னேறியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
வாழ்க்கையில் மாற்றமுண்டாக்கும் இத்தகைய நிகழ்ச்சிகள், சிறைவாசிகளின் இதயத்தைத் தொடுவதோடு கோபம் மற்றும் வெறுப்பு போன்றவற்றிலிருந்து விடுபட்டு, தங்களுடைய இயல்பு நிலைகளான அன்பு, விடுதலை, ஆனந்தம் இவற்றில் மலர்வதற்கு மிகவும் உதவியாக உள்ளது.
இந்த வகுப்பினை மேலும் கூடுதலான சிறைக்கூடங்களுக்கு விரிவு படுத்துவதற்கான வாய்ப்புகளையும், நிதியுதவியையும் ஈஷா அறக்கட்டளை நாடுகிறது. 'யோகப் பயிற்சிகள் செய்வது, நிலையற்ற மனங்களைத் தூய்மைப்படுத்துவதிலும், இதயத்திற்கு அமைதியைக் கொண்டு வருவதிலும் முக்கியமான பங்கு வகிக்கின்றது' என்று சத்குரு கூறுகிறார்.
இத்தகைய வகுப்புகள், காலப்போக்கில், எத்தனையோ கடும் குற்றவாளிகளை ரிஷிகளையொத்த மனிதர்களாக மாற்றியிருக்கிறது.