Child Rights Advocacy

குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு

ஈஷா அறக்கட்டளை, குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு மற்றும் கிராமப்புற இளைஞர் முன்னேற்றம் குறித்து மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இதை எதிரொலிப்பதுபோல், கிராமப்புறங்களின் நலிவுற்ற குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் ஆரோக்கியத்துடன் இணைந்த முன்னேற்றத்திற்கான செயல்திட்டங்களில் முழு முனைப்புடன் இயங்குகிறது.

கல்வி: தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு தாலுகாவிலும் ஒன்று என 200க்கும் மேற்பட்ட ஈஷா வித்யா ஆங்கில மெட்ரிகுலேஷன் பள்ளிகளை நிறுவுகின்ற குறிக்கோளுடன் 2006-ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் துவங்கப்பட்ட திட்டம்தான் ஈஷா வித்யா கிராமப்புறக் கல்வித் திட்டம். கணிணிக் கல்வியை அடிப்படையாகக் கொண்ட உலகத்தரத்திற்கிணையான ஆங்கில வழிக்கல்வியை கிராமப்புறப்புறக் குழந்தைதளுக்கு இந்தப் பள்ளிகள் வழங்குவதோடு Child Rights Advocacy விளையாட்டுக்கள், கலைகள், மற்றும் இசைப் பயிற்சிகள் மூலமாக அவர்களின் மற்ற திறமைகளும் வெளிக் கொண்டு வரப்படுகின்றன. ஈஷா வித்யா பள்ளிகளைச் சாராத பிற கிராமக் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகைகள், இலவசப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், உடைகள் மற்றும் ஊட்டச் சத்துணவு வழஙகுதல் மற்றும் கணிணி கல்வி வகுப்புகள் போன்றவற்றை வழங்குவதன் மூலம் அறக்கட்டளை மேலும் பெருமளவிலான மக்களைச் சென்றடைகிறது.

ஈஷா ஹோம் ஸ்கூல், மூலம் ஒரு வீடு போன்ற சூழலில் தரமான கல்வி வழங்கும் குறிக்கோள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒரு குழந்தையினுள் எழுகின்ற இயல்பான அறிவுத் தேடலைத் தூண்டக் கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள மற்றுமொரு வெற்றிகரமான திட்டமாக ஈஷா ஹோம் ஸகூல் விளங்குகிறது.

ஆரோக்கியப் பணி: கிராமப்புத்துணர்வு இயக்கத்தின் மருத்துவர்கள் தனிப்பட்ட கவனம் செலுத்தி தரமான சிகிச்சை அளிப்பதனால் கிராமப்புறத்தின் சிசுக்கள் மற்றும் குழந்தைதளின் துயர் துடைக்கப்படுவதோடு பெற்றோர்களுக்கு சுகாதார நடவடிக்கை மற்றும் ஆரோக்கிய வாழக்கை முறை குறித்து அறிவுறுத்தப்படுகிறது. ஈஷா அறக்கட்டளையின் நடமாடும் மருத்துவமனை கிராமங்களுக்கு அவ்வப்போது சென்று, பலவீனக் குறைபாட்டினால் ஏற்படக் கூடியதும், எளிதில் குணமாகக் கூடியதுமான குழந்தைகளின் உடற்குறைகளை தக்க நேரத்தில் கண்டுபிடித்து பேரிழப்புகள் நிகழாமல் தடுக்க உதவி புரிகிறது.

இளைஞர் முன்னேற்றம்: கலவி மையங்களில் பயிற்சிப் பட்டறைகள், விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மற்றும் ஏற்புரை கூட்டங்கள் நடத்தப்படுவதால், இளைஞர் சமுதாயத்திற்கு ஒழுக்க முறைகள், சமூகத் திறன் குறித்த வளர்ச்சிகள் அறிமுகமாகிறது. குழந்தைகளுக்கான தனித்துவம் வாய்ந்த வேடிக்கை நிறைந்த ஈஷா யோகா வகுப்புகள், பள்ளி இறுதிப் பருவ மாணவ சமுதாயத்தினருக்கு அளிக்கப்படுவதன் வாயிலாக, அவர்கள் தம் திறமையை வளர்த்துக் கொள்வதிலும், கூரிய கவனம் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி அடைவதிலும் பெருமளவு பங்காற்றுகிறது

சுற்றுச்சூழல்: வனஸ்ரீ சுற்றுச்சூழல் மையம் என்ற அமைப்பின் மூலமாக, பொதுவான பள்ளிக்கல்வித் திட்டத்தில் அடங்காத விஷயங்களாகிய, இயற்கைக் கல்வியின் அம்சங்கள், நாட்டின் செழுமையான பாரம்பரியத்தைக் காப்பது குறித்த சிறப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகின்றன. இதனால் பசுமையான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதற்கு இளைஞர்களை ஊக்கப்படுத்த முடிகிறது. மாணவ மாணவியர் தனிப்பட்ட வகையில் செயல்பட்டு 'சுற்றுச்சூழல் சங்கங்கள்' உருவாக்கி அதன் மூலம் விதை சேகரித்தல், தாவரக்கன்று வளர்த்தல், மரக்கன்றுகள் விநியோகித்தல் மற்றும் மரம் நடுதல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.

Rural Youth Development Rural Youth Development Rural Youth Development Vanashree Eco Center 
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • TwitThis
  • StumbleUpon
  • Technorati
  • Google
  • YahooMyWeb
 
ISHA FOUNDATION
Isha Foundation - A Non-profit Organization © Copyright 1997 - 2021. Isha Foundation. All rights reserved
Site MapFeedbackContact UsInternational Yoga DayGuru Purnima 2019 Copyright and Privacy Policy Terms and Conditions